James Vasanthan Controversial FB Post : கோவையில், கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அந்த பெண் மீதுதான் தவறு என்று சினிமா பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாணவில் வன்கொடுமை:
கோவையில் நவ.2ஆம் தேதி இரவு விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை தாக்கி அந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரை திங்கட்கிழமை இரவு காவல்துறையினரால் சுட்டுப் பிடித்தனர். அதனை தொடர்ந்து இந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேருக்கு 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மாணவி மீது தவறு!
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இந்த கோவை சம்பவம் நடந்த பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இதை படித்தவர்களுக்கு பகீரென தூக்கி வாரிப்போட்டுள்ளது. அவர் அதில் 8 பாய்ண்ட்களை சேர்த்துள்ளார். அதில் இரண்டாவதாக, “அந்த பெண் மீது தவறு” என்று கூறியிருக்கிறார்.
“முதலில், அந்தப் பெண் தவறு. இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்?
பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்?” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இது, கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, “அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோனதல்லாவா இப்போது! இனி அழுது பயனில்லை.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை படிக்கும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணை விட குற்றவாளிகளை பார்த்தால்தான் இவருக்கு பாவமாக இருக்கும் போல என தோன்றுகிறது. இதையடுத்து, இணையவாசிகள் இவரது கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பெண்ணை குறை சொல்லக்கூடாது!
“அந்த பெண், ஏன் அந்த நேரத்தில் வெளியில் சென்றார்” என்பது, எந்த பாலியல் சம்பவத்திற்கு பின்னும் பல பூமர்களுக்கு தோன்றும் கேள்வியாகும். இதற்கு, கோவை மாநகர கமிஷணர் சரவண சுந்தர் நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்தார். ”ஒருவர் தனிப்பட்ட விஷயங்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், எந்த தீர்ப்பும் பொதுமக்கள் வெளியிட வேண்டாம். பெண் செய்தது சரியா தவறா என்பதை யாரும் விசாரிக்க வேண்டாம். அது அவர்களின் சுதந்திரம், அவர்களின் இஷ்டம்” என்று கூறியருந்தார்.
மேலும் படிக்க | கோவை மாணவி வன்கொடுமை: கடத்தியது முதல் போலீசார் கண்டுபிடித்தது வரை.. நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









