HIT The Third Case Movie Review Tamil : தெலுங்கில் இதற்கு முன்பு வெளியான ஹிட் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகி உள்ளது. சைலேஷ் கோலானு இயக்கத்தில் உருவாகியுள்ள HIT The Third Case படத்தில் நானி, ஸ்ரீரிநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீனிவாஸ், அதில் பாலா, ராவு ரமேஷ், சமுத்திரக்கனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் கார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்தி திப்பிரிநேனி மற்றும் நானி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் இந்த படத்தை வெளியிடுகிறார். மிக்கி ஜே மேயர் இசையமைக்க, கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் கதை:
மிகவும் கோவக்கார போலீஸ் அதிகாரியான நானி ஜம்மு காஷ்மீரில் இருந்து மாற்றப்பட்டு ஆந்திர பிரதேசத்தில் பதவி ஏற்கிறார். அவர் பதவியேற்ற உடனையே ஒரு கொடூரமான கொலை சம்பவம் நடக்கிறது. அதனை தனது பாணியில் விசாரணை செய்கிறார் நானி. ஆனால் இந்த கொலையை செய்தது நானி தான் என்பது சொல்லப்படுகிறது. மேலும் பிளாஷ்பேக்கிலும் இதே போல பல கொலை சம்பவம் நடக்கிறது. போலீஸ் அதிகாரியாக இருந்து கொண்டு எதற்காக நானி இந்த கொலையை செய்தார்? இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கும் படம் தான் HIT The Third Case.
Hit படத்தை முழுவதுமாக நானி தனது தோள்களில் சுமக்கிறார். ஆக்சன் காட்சிகள் மூலமே திரைக்கதை நகர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சண்டைகளிலும் தனது முழு பலத்தையும் கொடுத்து நடித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் ஒரு வீட்டிற்குள் நடக்கும் மொத்த சண்டை காட்சி படமாக்கப்பட்ட விதம் விதம் சிறப்பாக இருந்தது. இன்வேஸ்டிகேஷன் தொடர்பான காட்சிகளிலும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நானி. கதாநாயகியாக ஸ்ரீரிநிதி ஷெட்டிக்கு படம் முழுக்கவே வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நானியின் அப்பாவாக வரும் சமுத்திரக்கனி, போலீஸ் அதிகாரியாக சூர்யா ஸ்ரீனிவாஸ், அதில் பாலா, ராவு ரமேஷ் ஆகியோரும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
கிளைமாக்ஸில் கார்த்தியின் கேமியோவும் நன்றாக இருந்தது. அடுத்த பாகத்திற்கான லீட் போல இந்த காட்சி இடம் பெற்று உள்ளது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நடக்கும் சண்டை காட்சிகள் பெரிதாக போர் அடிக்காமல் நன்றாகவே இருந்தது, ஆனாலும் ஏன் இவ்வளவு வயலன்ஸ் என்ற கேள்வியும் நம் மனதிற்கு எழுகிறது. A சர்டிபிகேட் கொடுத்து இருந்தாலும் அதிகமான சண்டை காட்சிகள் மற்றும் ரத்த காட்சிகள் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.
முடிவில்..
ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் அது தொடர்பான காட்சிகள் இல்லாமல், வெறும் சண்டை காட்சிகள் மட்டுமே அதிக அளவில் உள்ளது. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் அனைத்தும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி இந்த படத்தில் வயலன்ஸ் காட்சிகளை இன்னும் சற்று குறைத்து, இயக்குனருடன் இணைந்து திரைக்கதையில் இன்னும் சற்று சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்.
மேலும் படிக்க | Retro Movie Review | சூர்யாவின் ரெட்ரோ படம் எப்படி இருக்கு? இதோ திரை விமர்சனம்!
மேலும் படிக்க | சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









