Test திரைப்படம் எப்படி இருக்கு? மாதவன்-நயன் காம்போ ஹிட்டா...? சுமாரா...?

Test Movie Review: மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள Test திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தை தந்ததா இல்லை அயர்ச்சியை ஏற்படுத்தியதா என்பதை இந்த திரை விமர்சனத்தில் காணலாம்.  

Written by - Sudharsan G | Edited by - Yuvashree | Last Updated : Apr 5, 2025, 10:43 AM IST
  • Test திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலீஸ்.
  • தயாரிப்பாளரான சசிகாந்த் இப்படத்தை இயக்கி உள்ளார்.
  • பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் முதன் முதலில் இசைமயைத்துள்ளார்.
Test திரைப்படம் எப்படி இருக்கு? மாதவன்-நயன் காம்போ ஹிட்டா...? சுமாரா...?

Test Movie Review: நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் தனித் தனியாக ஏதுவாது படத்தில் நடித்தாலே, அந்த திரைப்படம் நிச்சயம் தனித்துவமாக இருக்கும் என்பது பொதுவான பார்வையாக உள்ளது. அப்படியிருக்க, இந்த மூவரும் ஒரே படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தால் நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பு எழும். 

Add Zee News as a Preferred Source

அந்த வகையில், மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மீன் உள்ளிட்டோர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'Test' திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி அன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் மட்டுமின்றி பல்வேறு நாட்டு மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் வெளியாகி உள்ள இந்த Test திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தை தந்ததா இல்லை அயர்ச்சியை ஏற்படுத்தியதா என்பதை இந்த திரை விமர்சனத்தில் காணலாம். 

Test - கதை சுருக்கம்

சென்னையில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட்  தொடரை மையமாக வைத்து, அதுவும் தொடரின் கடைசி போட்டியை மையமாக வைத்து இந்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சாரா (மாதவன்), அர்ஜூன் (சித்தார்த்), குமுதா (நயன்தாரா) ஆகியோரை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. 5 நாள்கள் நடக்கும் அந்த டெஸ்ட் போட்டியுடன் எப்படி இந்த 3 பேரின் வாழ்க்கை பின்னப்பட்டிருக்கிறது என்பதே கதையின் சுவாரஸ்யம்.

Test - முக்கிய கதாபாத்திரங்கள்

இதில் ஓய்வுபெறும் கட்டத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரராக சித்தார்த், தாயாக துடிக்கும் பள்ளி ஆசிரியையாக நயன்தாரா, நாட்டையே மாற்றப்போகும் கண்டுப்பிடிப்பை கையில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கும் லட்சியவாதியாக மாதவன் என முக்கிய கதாபாத்திரங்கள் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண்வன், மனைவியாக நடித்துள்ள மாதவன் - நயன்தாரா ஜோடி அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சித்தார்த்தின் மனைவியாக மீரா ஜாஸ்மின், மாதவனின் நண்பனாக (சொல்லப்போனால் மனச்சாட்சியாக) காளி வெங்கட் ஆகியோரும் சிறப்பான தேர்வு எனலாம்.

Test - படத்தின் பிளஸ் பாயின்ட்ஸ்

கிரிக்கெட்டை சுற்றி இந்த படம் அமைந்திருந்தாலும் இது கிரிக்கெட்டை பற்றிய திரைப்படம் அல்ல. ஒரு மனிதனின் விருப்பு, வெறுப்புகள், சூழல்கள், மனநிலைகள் எப்படி தனக்கு தொடர்பே இல்லாதவர்களையும் பாதிக்கும் என்பதை இந்த படம் விவரித்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்து கீழே விழும் ஒரு வீரரின் வாழ்க்கை, தனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பில் IVF மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை, சராசரியாக வாழ பழக்கிக்கொண்டவர்களை வெறுக்கும் ஒரு ஆணின் வாழ்க்கை என படம் நெடுக தத்துவங்கள் நிறைந்திருக்கின்றன.

ஆனால் அதுவல்ல படத்தின் சிறப்பு. இந்த கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை சரியாக வெளிச்சமிட்டு காட்டியதுதான் படத்தின் ஆகச்சிறந்த வெற்றி. உதாரணத்திற்கு படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா... ஏன் மீரா ஜாஸ்மின் உள்பட இந்த 4 கதாபாத்திரங்களும் கோபம் கொள்ளும் இடங்களை நோட் பண்ணிப் பார்த்தால் நிச்சயம் அதில் ஒரு முதிர்ச்சி தென்படும். பல்வேறு படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சசிகாந்திடம் மறைந்திருந்த ஒரு நல்ல எழுத்தாளரும், இயக்குநரும் இந்த திரைப்படத்தின் மூலம் வெளியே வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அந்த கதாபாத்திரங்களின் பொறுமையின் உச்சியிலேயே எப்போதும் இருப்பார்கள், அவர்கள் எரிமலையாக வெடிக்கும் தருணத்தை எளிமையாக நாடகத்தன்மை இல்லாமல் காட்சிப்படுத்துவது சிரமம். அதை கச்சிதமாக செய்திருக்கிறார். இதில் நடித்த அனைவருமே மிகத் தேர்ந்த நடிகர்கள் என்பதை இந்த படத்திலும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உள்ள அம்சமாக படத்திலும் பல இடங்களில் ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. எந்த கணத்தில் யார் உச்சம் பெறுவார் என்பதை கணிக்க முடியவில்லை. இது படத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. 

Test - படத்தின் மைனஸ்

எளிய மனிதர்களை காட்சியப்படுத்துவதில் இயக்குநர் கோட்டைவிட்டுள்ளார். பெரும்பாலும் அனைவருமே ஒரு எலைட் வாசத்திலேயே படம் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். முதல் பாதியையாவது சற்று வேகமாக நகர்த்தியிருக்கலாம். பாடகர் சக்தி ஸ்ரீ கோபாலன் முதன்முதலாக இப்படத்தில் இசையமத்துள்ளார். பாடல்களும், பின்னணி இசையும் சுமாராகவே இருந்தது. படம் கடைசியில் சற்று இழுத்துக்கொண்டே போவதாக இருந்தது. ஓடிடி என்றால் படம் மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் இனி வேலைக்காகாது.

Test - படம் பார்க்கலாமா? வேண்டாமா...?

அழகான ஒளிப்பதிவு, பல இடங்களில் ரசிக்க வைக்கும் வசனங்கள், மாதவன் - நயன் இடையேயான காதல் காட்சிகள், முதிர்ச்சியான இயக்கம், நடிகர்களின் சிறந்த வெளிப்பாடு ஆகியவை படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டுசென்றுள்ளது. நீங்கள் டி20 ரசிகர்களாக இருந்து முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் அயர்ச்சி அளிக்கலாம். 

ஆனால், நிதானமாக பொறுமையாக காலை 9 முதல் மாலை 5 மணிவரை டெஸ்ட் போட்டி பார்க்க விருப்பப்டுபவர்களுக்கு இந்த Test நிச்சயம் தனித்துவமான அனுபவத்தை அளிக்கும். ஆனால், எனது டி20 ரசிகர்களாக நீங்கள் இருந்தாலும் இந்த 'Test'-ஐ பார்த்தால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டின் சாராம்சமும் உங்களுக்கு புரியவரலாம். குறிப்பாக, இதை கிரிக்கெட் ரசிகர்களுக்கான படம் அல்ல... கிரிக்கெட்டை தாண்டி இதில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளது, அலசப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | NEEK Movie Review: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: திரை விமர்சனம்..

மேலும் படிக்க | நல்ல நாவல் படித்த உணர்வு..ஷ்யாமின் அஸ்திரம் படம் எப்படி? திரை விமர்சனம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News