Shah Rukh Khan உடன் நடிக்கவுள்ளாரா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா? கோலிவுட்டில் சலசலப்பு

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிகரற்ற இடத்தை பிடித்துள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஏறக்குறைய பத்து ஆண்டு காலமாக, அவர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 24, 2021, 10:06 PM IST
  • தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிகரற்ற இடத்தை பிடித்துள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
  • வசூலிலிலும் அவரது படங்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • இந்திய சூப்பர் ஸ்டாருடன் விரைவில் நயன்தாரா நடிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Shah Rukh Khan உடன் நடிக்கவுள்ளாரா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா?  கோலிவுட்டில் சலசலப்பு

Kollywood News: தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு நிகரற்ற இடத்தை பிடித்துள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஏறக்குறைய பத்து ஆண்டு காலமாக, அவர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

அதிக அளவில் சம்பளம் பெறுவதில் மட்டுமல்லாமல், வசூலிலிலும் நயன்தாராவின் (Nayanthara) படங்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. ஆண் சூப்பர்ஸ்டார்களைப் போலவே அவரும் தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் பல திரைப்பட ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாக இப்போது கூறப்படுகிறது. இதன் மூலம் வரவிருக்கும் இன்னும் பல ஆண்டுகளுக்கும் அவரே லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பார் என்பது தெளிவாகிறது. 

பாலிவுட்டில் இப்போது பரபரப்பான சலசலப்பு என்னவென்றால், இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு (Shahrukh Khan) ஜோடியாக நயன்தாரா ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். கிங் கான் தயாரித்து நடிக்கவுள்ள ஒரு படத்தை தமிழ் இயக்குனரான அட்லி இயக்கவுள்ளார் என்று பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஷாஹ்ருக் கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா முதல் தேர்வாக இருக்கிறார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ: நயன்தாராவின் நெற்றிக்கண்: விக்னேஷ் சிவன் அளித்த லேட்டஸ்ட் அப்டேட் இதொ!! 

நயன்தாராவின் படங்களில் மாபெரும் வெற்றிப்படமாக இருந்த 'ராஜா ராணி' படத்தை அட்லீ தான் இயக்கினார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா மீண்டும் மறுபிரவேசம் செய்ய 'ராஜா ராணி' மற்றும் 'பாஸ் எங்கிரா பாஸ்கரன்', இரு படங்களும் உதவின. அதன்பிறகு அட்லீ (Atlee) மற்றும் நயன்தாராவுக்கும் இடையில் நல்ல நட்பும் தொழில்முறை உறவும் இருந்து வந்துள்ளது. தளபதி விஜய்யின் 'பிகில்' படத்திற்காக இயக்குனர் அட்லியுடன் நயன்தாரா மீண்டும் இணைந்தார். 

ஷாஹ்ருக்கானின் படத்தையும் அட்லிதான் இயக்கவுள்ளதால், இந்த படத்திற்கு நயன்தாரா தன் ஒப்புதலை அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்திய சூப்பர் ஸ்டார் ஷாஹ்ருக் கானும் டேலி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!!

ALSO READ:Beast: விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தது பீஸ்ட் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News