)
தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக உள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அவரது வாழ்க்கை பலருக்கும் உத்வேகம் அளிக்கும் விதிகமாக உள்ளது. நயன்தாராவின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல தெரிந்தாலும், அதன் பல பக்கங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. அவரது திரைப்படங்கள், காதல், திருமணம், குழந்தைகள் என அனைத்தும் செய்திகளாக பேசப்பட்டாலும், அவரது குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக அவரது உடன் பிறந்த சகோதரர் பற்றிய விவரங்கள் எப்போதும் ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படம் அந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நயன்தாராவின் அண்ணனை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நயன்தாராவிற்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பதே பலருக்கும் புதிய செய்தி தான். அவரது பெயர் லெனோ குரியன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்; தந்தை குரியன் கொடியாத்து மற்றும் தாய் ஓமனா குரியன். லெனோ குரியன் தனது தங்கையை போல திரையுலகின் வெளிச்சம் தன் மீது படாமல், தன் வாழ்க்கையை மிக தனிப்பட்ட முறையில் அமைத்து கொண்டுள்ளார். இதனால், மீடியாவின் கண்களில் இருந்து அவர் எப்போதும் விலகியே இருந்தார். ஆனால், சமீபத்தில் அவர் தனது தங்கை நயன்தாரா மற்றும் மைத்துனர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட ஒரு குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி "யார் இந்த லெனோ?" என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
ரசிகர்களின் இந்த ஆர்வத்திற்கு விடையளிக்கும் வகையில், லெனோ குரியன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக தலைநகரான துபாயில் வசித்து வருகிறார். அங்கு அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் லெனோ குரியனின் வணிக சாம்ராஜ்யத்தில், நயன்தாராவும் ஒரு முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. தனது சகோதரரின் துபாய் தொழில்களில் நயன்தாரா கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலம் இருவருக்கும் இடையே ஒரு வலுவான தொழில்முறை உறவும் பேணப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது நயன்தாரா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளராகவும் திகழ்வதை உறுதி செய்கிறது.
நயன்தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறார் என்பதற்கு அவரது குடும்பமே சாட்சி. 2022-ல் இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்து, பின்னர் வாடகைத்தாய் மூலம் உயிர் மற்றும் உலக் என்ற இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இந்த விஷயங்கள் அனைத்தும் பொதுவெளியில் பெரும் விவாதங்களை கிளப்பின. அதுபோலவே, அவரது தொழில்முறை வாழ்க்கையிலும் சில சர்ச்சைகள் அவ்வப்போது எழுவதுண்டு. இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும், தனது அண்ணனை பற்றிய ஒரு சிறு துரும்பையும் அவர் வெளியே விட்டதில்லை. தற்போது லெனோ குரியனின் புகைப்படம் வைரலாகி, அவரது இருப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், நயன்தாராவின் குடும்ப பின்னணி குறித்த ஒரு முழுமையான தகவல் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ