Nayanthara Refused To Act With Ajith Kumar: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருபவர், நடிகை நயன்தாரா. இவர், தமிழில் நடிகையாக இருப்பதோடு மட்டுமன்றி, சமீபத்தில் பெண்களுக்கான ப்யூட்டி ஸ்கின் கேர் பிராண்ட் ஒன்றை தொடங்கி அதை நடத்தி வருகிறார். அதேபோல் கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது குட் பேட் அக்லி படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை:
2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் தான் நேர்கொண்ட பார்வை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்கினார். அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் (Ajith Kumar) நடிக்க அவருடன் இந்த படத்தில் நடிகை ஷரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா நடித்திருந்தனர். இதில் நடிகை வித்யா பாலன் அஜித்துக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்தியில் பெரும் வெற்றிபெற்ற ஒரு படத்தை அதன் ஜீவன் மாறாமல் தமிழுக்குக் கொண்டுவந்திருந்தார் இயக்குனர் எச். வினோத். இந்த படம் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. தமிழில் ரீமேக்கானதைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் உருவானது.
அஜித் ரீமேக் படத்திற்கு நோ சொன்ன நயன்தாரா:
இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முதலில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு கேட்டதாகவும், ஆனால் தன்னுடைய கதாபாத்திரம் சிறிதாக இருப்பதால் அதில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
நயன்தாரா நடிக்கும் அடுத்தடுத்த படங்கள்:
இதனிடையே கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரையுலகில் தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா, தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களை நடித்து தற்போது லேடி சூப்பர்ஸ்டார் ஆக ஜொலித்து வருகிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியான படம் டெஸ்ட். மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இதை அடுத்து தற்போது நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன்-2, டியர் ஸ்டூடன்ட்ஸ் என்கிற மலையாள படம், தனி ஒருவன்-2, ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை சினிமா, குழந்தைகள், தொழில் என நயன்தாரா தொடர்ந்து பிஸியான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நடிகைகள் எப்போதும் இளமையாக இருக்கக் காரணம் இதுதானா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









