Neeya Naana Gopinath As News Reader : தமிழ் மக்களை எளிதில் சென்றடையக்கூடிய விஷயமாக இருப்பது, ஊடகம் (மீடியா) மட்டுமே. முன்னர், பெரிய பெரிய நடிகர்கள்-நடிகைகளை கூட அவ்வளவு எளிதில் பார்த்து விட முடியாது. ஆனால், தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக இருப்பவர்களை எளிதில் ரீச் செய்து விடலாம். இப்போது நிலை வேறு. பல காலங்களாக தொலைக்காட்சியில் ஸ்டார் தொகுப்பாளர்களாக இருப்பவர்கள், அதன் பிறகு நடிப்பு-சினிமா என வேறு பக்கம் சென்று விடுகின்றனர். இருப்பினும், ஒரு சிலர் “எனக்கு இந்த தொழில் பிடிக்கும், அதனால் தொடர்ந்து இதையே செய்வேன்” என தொகுப்பாளர்களாகவே தொடர்கின்றனர். அப்படிப்பட்ட தாெகுப்பாளர்களுள் ஒருவர், கோபிநாத்.
‘நீயா நானா’ கோபிநாத்:
வெறும் கோபிநாத் என பெயரை வைத்து சொன்னால், பிறருக்கு இவரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஆனால், ‘நீயா நானா’ கோபிநாத் என்றால் அனைவராலும் எளிதாக கண்டுகொள்ள முடியும். 2006-ல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, 23 சீசன்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத்தான்.
இவரது ஸ்டைலே கோட் அணிந்து கொண்டு, எவ்வளவு பெரிய டாப்பிக்காக இருந்தாலும் அதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக கொண்டு செல்வதே ஆகும். இவர் எங்காவது கோட் அணியாமல் சென்றால், “ஐயோ கோபிநாத்துக்கே கோட் இல்லையா?” என்று கலாய்ப்பதும் உண்டு. நெறியாளராக இருந்த இவர், சுமார் 19 வருடங்களாக ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர், இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஆவதற்கு முன்பு, செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்தி வாசிப்பாளராக..
விஜய் தொலைக்காட்சி, 1994ஆம் ஆண்டு ஆரம்பித்தது. எந்த ஒரு சேனல் ஆரம்பித்தாலும் முதலில் அதன் கட்டமைப்பு வேறு ஒன்றாகத்தான் இருக்கும். விஜய் தொலைக்காட்சியும் அப்படித்தான், ஆரம்பத்தில் வெளிநாட்டு தொடர்களை டப்பிங் செய்து ஒளிபரப்புவது, செய்திகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில்தான், கோபிநாத், செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். இது குறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் அவர், வர்த்தக உற்பத்தி குறித்து பேசுகிறார். யாரோ இதனை எடிட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கின்றனர். கோபிநாத், இதனை தனது ஸ்டோரியில் ரீ-ஷேர் செய்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பானது, இன்றைய 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டும்தான் தெரியும். இதை பார்த்த சிலர் தற்போது இதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இப்போது என்ன செய்கிறார் கோபி?
கோபிநாத், தற்போதும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதை தவிர்த்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார். பிற ஊடகங்களில் நடத்தப்படும் செலிப்ரிட்டி நேர்காணல்களையும் நடத்துகிறார். அப்போதும், இப்போதும் எப்போதும் ஸ்டார் தொகுப்பாளராக இருக்கும் இவரை தமிழ் நாட்டு மக்கள் பலருக்கும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நீயா நானாவில் ஒரு எபிசோடுக்கு கோபிநாத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மேலும் படிக்க | நீயா நானா மும்மொழிக் கொள்கை எபிசோடு நிறுத்தம் - யார் கொடுத்த அழுத்தம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









