CWC 6: களமிறங்கும் 4 புது கோமாளிகள்! இவ்ளோ பெரிய ஆட்களா..யார் யார் தெரியுமா?

New Comalies In Cooku With Comali 6 : தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இந்த சீசன் புது கோமாளிகள் களமிறங்க இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 29, 2025, 11:41 AM IST
  • விரைவில் தொடங்கும் குக் வித் கோமாளி 6
  • களமிறங்கும் 4 புது கோமாளிகள்
  • யார் யார் தெரியுமா?
CWC 6: களமிறங்கும் 4 புது கோமாளிகள்! இவ்ளோ பெரிய ஆட்களா..யார் யார் தெரியுமா?

New Comalies In Cooku With Comali 6 : தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள், மக்களின் வரவேற்பை பெற்றவையாக ஒர சில நிகழ்ச்சிகள் மட்டுமே இருக்கின்றன. அப்படி, மக்கள் மத்தியில் ஹிட் ஆன ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இதில் பங்கேற்கும் புது கோமாளிகள் யார் யார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

குக் வித் கோமாளி சீசன் 6:

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை, சமையல் 50 %, காமெடி 50% என்பதுதான் கான்செப்ட். ஒரு செலிப்ரிட்டி சமைக்க, அவருடன் சமையல் தெரியாத இன்னொருவர் அவருக்கு உதவி செய்பவராக இருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்து சமைக்க விட செய்யாத அளவிற்கு சில இடையூறுகளை வைப்பர். இப்படி ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இந்த நிகழ்ச்சி காமெடி-கலாட்டாவாக செல்லும்.

இதில் சீனியர் கோமாளிகளாக சுனிதா, புகழ், சரத் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். இதில், முதல் 3 சீசன்கள் பெரிய ஹிட் அடிக்க, 4வது சீசன் பெரிதாக எடுபடவில்லை. இதையடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் ஏதோ பஞ்சாயத்து ஆனதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவர்கள் வேறு ஒரு சேனலில் இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். செஃப் வெங்கடேஷ் பட்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு பிரியங்கா-மணிமேகலை இடையே ஏற்பட்ட மோதலும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, மணிமேகலையும் இந்நிகழ்ச்சியில் இருந்து விளகினார். இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

புது காேமாளிகள்:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசனில் முன்னர் இருந்ததை விட சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சீனியர் கோமாளிகள் இதில் ஒரு அங்கமாக இருந்தாலும், இன்னும் சில புது கோமாளிகளும் இதில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?

கடந்த பிக் பாஸ் சீசனில் ரன்னர்-அப் பட்டத்தை பெற்று அனைவரையும் கவர்ந்தவர் சௌந்தர்யா. இவரது குரலை பல நாட்களாக இவர் பலவீனமாக நினைத்து கொண்டிருந்தார். ஆனால், அதுவே அவரது அழகான அடையாளமாக மாறிப்போனது. இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புது கோமாளியாக பங்கேற்க இருக்கிறார்.

அதே போல, சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று, கானா பாடல்கள் பாடி பலரை கவர்ந்தவர் பூவையார். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவரும் புது கோமாளியாக களமிறங்குகிறார். 

இவர்களை போல கன்னியாகுமரியின் மைந்தன் என அறியப்படும் சர்ஜினும் இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இருக்கிறார். நடனத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்து பிரபலமாக வலம் வரும் டோலி என்பவரும் புது கோமாளியாக வருகிறார். இவர்கள் அனைவருமே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பெரிய ஆட்களாக இருக்கின்றனர், இவர்களை ஃபாலோ செய்யும் பல லட்சம் பேரும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் காேமாளிகள்..

பழைய கோமாளிகளான புகழ், சுனிதா, ராமர், சரத், தங்கதுரை உள்ளிட்டவர்கள் இந்த 6வது சீசனிலும் கோமாளிகளாக தொடர இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி, எப்போது ஆரம்பிக்கிறது என்பது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புது தொகுப்பாளர்! பிரியங்காவிற்கு பதில் இவரா?

மேலும் படிக்க | விஜய் டிவியில் இருந்து வெளியேறும் ஸ்டார் தாெகுப்பாளர்கள்?! யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News