அடுத்தடுத்த படங்கள்... படுபிசியாக இருக்கும் நயன்தாரா.. லிஸ்ட் பெருசா போகுது

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் யாரும் நடிகை நயன்தாரா, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 9, 2025, 03:46 PM IST
  • ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார்.
  • கவின் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
  • கன்னட படத்தில் ‘கே.ஜி.எப்.' புகழ் யாஷ் உடனும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அடுத்தடுத்த படங்கள்... படுபிசியாக இருக்கும் நயன்தாரா.. லிஸ்ட் பெருசா போகுது

Nayanthara Upcoming Movie List: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருபவர், நடிகை நயன்தாரா. இவர், தமிழில் நடிகையாக இருப்பதோடு மட்டுமன்றி, சமீபத்தில் பெண்களுக்கான ப்யூட்டி ஸ்கின் கேர் பிராண்ட் ஒன்றை தொடங்கி அதை நடத்தி வருகிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரையுலகில் தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா, தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்த படத்தில் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். 

Add Zee News as a Preferred Source

அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கஜினி, சிவகாசி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு, ஸ்ரீ இராம ராஜ்யம், ராஜா ராணி, தனி ஒருவன், நானும் ரவுடி தான், அறம், இமைக்கா நொடிகள், பிகில், மூக்குத்தி அம்மன் என 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்படி தென்னிந்தியாவில் டாப் நாயகியாக வலம் வந்த இவர் அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். திரை உலகின் லேடி சூப்பர்ஸ்டார் ஆக ஜொலித்து வரும் இவர் சமீபத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா தனது பிஸியான வேலைகளின் நடுவில் கிடைக்கும் நேரத்தை தனது குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழிலில் நிறைய முதலீடு செய்து வருகிறார். டீ விற்பனை நிறுவனம், நாப்கின் நிறுவனம் என முதலீடு செய்துள்ளவர் 9 Skin என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். 

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா தற்சமயம் பல படங்களை தான் கைவசம் வைத்துள்ளார். அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா ‘ராக்காயி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்-2', இத்துடன் கவின் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்' என்ற மலையாள படத்தில் நிவின் பாலியுடனும், டாக்சிக் என்ற கன்னட படத்தில் ‘கே.ஜி.எப்.' புகழ் யாஷ் உடனும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுதவிர ‘தனி ஒருவன்-2', மம்முட்டியுடன் புதிய படம் என வரிசையாக இவர் தற்பது நடித்து வருகிறார். இதன் மூலம் அடுத்த ஆண்டு வரை பாடு பிசியான நடிகையாக மாறியுள்ளார் நடிகை நயன்தாரா.

மேலும் படிக்க | நடிகைகள் எப்போதும் இளமையாக இருக்கக் காரணம் இதுதானா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மேலும் படிக்க | ஒல்லியாக இருக்க சாய் பல்லவி பருகும் ஒரே ஒரு பானம்! இயற்கையானது-நீங்களும் குடிக்கலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News