Only Person Got Profited From Thug Life : நாயகன் படம் வெளியானதிற்கு 38 வருடங்கள் கழித்து, கமலும் மணிரத்தினமும் மீண்டும் கூட்டணி அமைத்த படம், தக் லைஃப். இந்த படத்தில் கமலுக்கு இணையான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் வெளியான தக் லைஃப் படம், அனைவரையும் ஏமாற்றியது. ஆனால் இந்த படத்தால் சிலருக்கு நன்மையும் நடந்திருக்கிறது.
தக் லைஃப் படம்:
கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த தக் லைஃப் திரைப்படத்தில், அவருடன் சேர்ந்து சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த படத்தை பாரக்க, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தனர். படமும் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் இறுதியில் வீணானது.
தக் லைஃப் படம், கடந்த ரிலீசுக்கு முன்னரே தக் லைஃப் படக்குழுவினரின் செயலால் இந்த படம் பேசிப் பொருளாக மாறியது. படத்தை ஊர் ஊராக சென்று படக்குழுவினர் பிரமோஷன் செய்தது மட்டுமில்லாமல், கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னட மொழி இருந்தது என்று கூறியது அதைவிட பெரிய பிரமோஷன் ஆக அமைந்தது. கர்நாடகாவில் படம் வெளிவருமா இல்லையா என்கிற சந்தேகம் உருவாக்கி இறுதியில் படத்தை எங்க வெளியிட வேண்டாம் என்று கமல் முடிவு செய்துவிட்டார்.
படக்குழுவிற்கு ஏற்பட்ட நஷ்டம்:
தக் லைஃப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம், மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்தன. படம், சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.
வெளியான நாளில் சுமார் ரூ.15 கோடி வரை கலெக்ட் செய்தது. அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் அப்படியே குறைந்தது. கர்நாடகாவில் வெளியாகாததால், ரூ.30 கோடி படத்திற்கு நஷ்டம் என்று கூறப்படுகிறது. இப்படி படத்தில் பணம் போட்ட கமல்ஹாசன், மணிரத்னம் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருக்கும் நிலையில், இதன் மூலம் ஒருவருக்கு மட்டும் லாபம் கிடைத்திருக்கிறது.
சின்மயி:
தக் லைஃப் படம் மூலம் பயன் பெற்ற ஒரே ஒரு நபர், பாடகி சின்மயிதான். அதுவும் எதிர்பாராத விதமாகத்தான் நடந்தது. தக் லைஃப் திரைப்படத்திறக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இவரது இசையில் ‘முத்த மழை’ பாடல் உருவாகி இருந்தது. இதை தமிழில் ஒரிஜினலாக பாடியது தீதான். ஆனால், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி இந்த பாடலை பாடிவிட்டார். இவரது வர்ஷன் பெரிய ஹிட் அடித்து விட்டது. தமிழில் சின்மயி பாடல் பாடவோ டப்பிங் கொடுக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு காரணம், டப்படிங் சங்கத்தின் உரிமையாளர் ராதாரவிதான் என்று சின்மயி கூறியிருந்தார்.
MeToo பிரச்சனைக்கு பிறகு, பல்வேறு தடைகளை சந்தித்த சின்மயி, தமிழில் பாட முடியாமலும் டப்பிங் கொடுக்க முடியாமலும் இருந்தார். இதையடுத்து, முத்தமழை பாடலுக்கு பிறகு திரையுலகினர் பலர் இவர் பக்கம் நின்றிருக்கின்றனர். டி.இமான், தற்போது தனது படத்தில் பாட சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதே பாேல விஜய் ஆண்டனியும் தான் கண்டிப்பாக தனது படத்தில் அவரை பாட வைப்பேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசி வரும் நெட்டிசன்கள், தக் லைஃப் படத்தால் பயன்பெற்ற ஒரே ஆள் சின்மயிதான் என்று பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | முத்தமழை பாடலுக்கு பின்..அதிகம் கேட்கப்படும் 5 சின்மயி பாடல்கள்!
மேலும் படிக்க | சின்மயி பாடுவதற்கு தமிழ் சினிமாவில் தடை விதிக்கப்பட்டது ஏன்? இதுதான் காரணம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ