Seeman About Isaignani Ilayaraja : E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் எஸ்ஏ சந்திரசேகர், ஆர்.வி உதயகுமார், தங்கர் பச்சான், கரு பழனியப்பன், வசந்த பாலன், திருமலை, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் தேவயானி, லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசும்போது, “இங்கே இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தவர்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ரசித்திருப்பீர்கள். ஆனால் ஒரு பானை சோற்றையும் ருசிக்கும் வாய்ப்பு சீமானுக்கும் கவிஞர் சினேகனுக்கும் எனக்கும் கிடைத்தது. ஒரு அறிமுக இயக்குநர் தனது படைப்பு இந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பதே அருமையான விஷயம். அதற்காக இயக்குநர் சிவபிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும். பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவர் என்பதால் இது குறித்து ஆச்சரியப்படவும் தேவையில்லை. எப்படி மண்வாசனை படத்தில் ஒரு வளையல் கடையில் வேலை பார்த்த பாண்டியனை துணிந்து பாரதிராஜா அறிமுகப்படுத்தினாலும் அந்த கதாபாத்திரத்தின் மூலமாக மக்களிடம் மனதில் ஒட்டிக் கொண்டார் பாண்டியன். அதன் பிறகு 85 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதேபோன்று ஒரு அறிமுகத்தை தான் இந்த படத்தில் இயக்குநர் சிவப்பிரகாஷ் விஜித்திற்கு கொடுத்துள்ளார். காலம் காலமாக ஒவ்வொரு படத்திற்கும் இளையராஜா எப்படி தனது இசையால் உயிரூட்டுவாரோ அதேபோல இந்த படத்திற்கும் செய்திருக்கிறார். இந்த படம் நிறைவாகவே வந்திருக்கிறது” என்றார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,
“பெருங்கோபத்தின் பிறப்பிடமே பேரன்பு என்பது தான். நான் என்னுடைய தம்பி படத்தை எடுத்த போது கீழே துணை தலைப்பாக பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் என போட்டிருந்தேன். என் தலைவரை மனதில் வைத்து தான் அந்த வார்த்தைகளை போட்டேன். தன் இனத்தின் மீது அவர் வைத்திருந்த பேரன்பு அந்த இனம் அழித்து ஒழிக்கப்படும்போது அதை காக்க வேண்டிய பெரும் கோபத்திற்கு ஆளாகி விட்டார். பாரதியின் பெரும் கோபத்திற்கு இந்த மண்ணை, மக்களை அவர் ரொம்பவே நேசித்தது தான் காரணம். புதியவர்களுக்கு துணிந்து வாய்ப்பு கொடுப்பதே பெரிய சாதனைதான். அதை ஜெய் கிருஷ்ணன் செய்துள்ளார்.
எப்படி இலக்கிய உலகில் ஒரு பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா.. அது ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற ஒரு படம் இது. தம்பி விஜித் பாலைவனச்சோலை படத்தில் சந்திரசேகர் வெளிப்படுத்தியது போன்று ஒரு அற்புதமான உடல் மொழி, நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவகுமாரின் மகன்கள் என்கிற அடையாளத்துடன் அறிமுகமானாலும் சூர்யாவும் கார்த்தியும் தங்கள் திறமையால் தான் வெளிச்சம் பெற்றார்கள். அதேபோல எஸ்ஏ சி யின் மகன் என அறிமுகமானாலும் விஜய் தனது ஆற்றலால் தான் என்று இவ்வளவு பெரிய புகழ்பெற்ற ஒரு இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் உழைப்பு தான் காரணம். எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கடுமையான உழைப்பு மட்டுமே. எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்து தான் சாதனை. சாதனையை வெற்றியின் மூலமாகத்தான் அடைய முடியும்.. வெற்றிக்கு கடின உழைப்பு வேண்டும்” என்று கூறினார்.
மேலும் படிக்க | ஜெயலலிதாவை ரஜினி எதிர்க்க முக்கிய காரணம்! ‘அந்த’ 1 சம்பவம்..30 வருட வலி..
மேலும் படிக்க | அடுத்தடுத்த படங்கள்... படுபிசியாக இருக்கும் நயன்தாரா.. லிஸ்ட் பெருசா போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









