Who Is Direct Actor Ajith Kumar Next Film? நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் 46வது படத்தை இயக்க உள்ள வெங்கி அட்லூரி அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த படத்திற்கு பிறகு அவர் அஜித் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் அவரை வைத்து சமீபத்தில் இயக்கிய படம், குட் பேட் அக்லி. இந்த படம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் வெளியானது. அதாவது இந்த படம், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது. வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தில், அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
குறிப்பாக குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கும் மேல் வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் 5 மற்றும் 6 ஆம் நாளில் படத்தின் வசூல் சரிவை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் வார நாட்கள் என்பதால், வசூல் மந்தமாக இருக்கிறது எனவும், வார இறுதி நாட்களில் மீண்டும் வசூல் உச்சத்தை திகொடும் என தியேட்டர் ஓனர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க - சர்ரென சரிந்த குட் பேட் அக்லி வசூல்! இப்படி ஆயிருச்சே..மொத்த கலக்ஷன் எவ்வளவு?
மேலும் படிக்க - ரஜினியுடன் காதலா? உண்மையை போட்டுடைத்த நடிகை லதா!
மேலும் படிக்க - குட் பேட் அக்லி படத்தில் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இந்த நடிகரா?









