9 மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்ட ஒரே தென்னிந்திய படம்! த்ரிஷா ஹீரோயின்..எந்த படம் தெரியுமா?

South Indian Movie Remade Into 9 Languages : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக விளங்கி வருபவர், த்ரிஷா. இவர் நடித்த ஒரு படம், சுமார் 9 மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த படம் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 23, 2025, 06:37 PM IST
  • 9 மொழிகளில் ரீமேக் ஆன படம்!
  • த்ரிஷா ஹீரோயின்..
  • எந்த படம் தெரியுமா?
9 மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்ட ஒரே தென்னிந்திய படம்! த்ரிஷா ஹீரோயின்..எந்த படம் தெரியுமா?

South Indian Movie Remade Into 9 Languages : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர், த்ரிஷா. 40களை தாண்டியும் சிங்கிளாக வலம் வரும் இவர், பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதில், ஒரு படத்தை 9 மொழிகளில் ரீ-மேக் செய்திருக்கின்றனர். அது என்ன படம் தெரியுமா?

40களை கடந்தும் சிங்கிளாக இருக்கும் த்ரிஷா..

திரையுலகை பொறுத்தவரை, ஒரு சில நடிகர்-நடிகைகள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்ப மாட்டார்கள். சில காலம் சிங்கிளாக இருந்து விட்டு, பின்பு ஒரு கட்டத்திற்கு மேல்தான் திருமணம் செய்து கொள்வர். ஆனால், தனது  41வது வயதிலும் இன்னும் சிங்கிளாக வலம் வரும் நடிகைகளுள் ஒருவர், த்ரிஷா.

மாடலாக இருந்து, துணை நடிகையாக அறிமுகமான இவர், முதன் முதலில் அறிமுகமான படம் மெளனம் பேசியதே. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு மென்மேலும் வாய்ப்புகள் குவிய, இப்போது தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.

த்ரிஷா நடித்த படம்..

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய், அஜித், சிரஞ்சீவி உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இதில், சில தெலுங்கு படங்கள் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. அதிலும் அவரே ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அப்படி, அவர் நடித்த படம் ஒன்று, பின்னர் 9 மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டது. அது என்ன படம் தெரியுமா?

இந்த படம், 2006 ஆம் ஆண்டு வெளியானது. இது, தெலுங்கில் வெளியான நுவ்வோஸ்தன்னானே நின்னோடண்டா படத்தின் தமிழ் ரீ-மேக் ஆகும். சித்தார்த் இதில் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். இந்த படம் தமிழில் உனக்கும் எனக்கும் என்ற பெயரில் வெளியானது. இதில் ரவி மோகன் த்ரிஷா ஹீரோ-ஹீரோயினாக நடித்திருந்தனர். அது மட்டுமன்றி, பெங்காலி, கன்னடம், மணிபுரி, ஒடியா, பஞ்சாபி உள்ளிட்ட 9 மொழிகளில் இப்படம் ரீ-மேக் செய்யப்பட்டது.

Trisha

கதை என்ன?

லண்டனில் இருந்து உறவினரின் திருமணத்திற்காக வரும் சந்தோஷ், அங்கு மணப்பெண் தோழியான கவிதாவை பார்க்கிறான். மோதலுடன் தொடங்கும் இவர்களின் சந்திப்பு பின்னர் காதலாக மாறுகிறது. அந்த காதலுக்கு வில்லன்களாக சொந்த வீட்டில் இருப்பவர்களே மாறுகின்றனர். அதன் பிறகு, கவிதாவின் அண்ணன் அவளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிட, காதலுக்காக சந்தோஷ் அவர்கள் வீட்டில் தங்கி விவசாயம் பார்ப்பான். கவிதாவின் அண்ணன் “என்னை விட 1 மூட்டை நெல் அதிகமாக அறுவடை செய்து காண்பித்தால், என் தங்கையை உனக்கு கட்டித்தற்றேன்” என வாக்கு கொடுக்க, அந்த போட்டியில் இறங்குகிறான் சந்தோஷ். இறுதியில் வென்றானா? என்பது கதை.

பெரிய ஹிட்!

தென்னிந்தியாவில் பெரிய ஹிட் அடித்த படங்களுள் இதுவும் ஒன்று. இப்படத்தை பிரபு தேவா இயக்கியிருந்தார். தமிழில் இதனை மோகன் ராஜா இயக்கியிருந்தார். இரு மொழிகளில் மட்டுமன்றி, எடுக்கப்பட்ட மொழிகளில் எல்லாம் இப்படம் நல்ல ஹிட் கொடுத்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதற்கு பிறகு, தென்னிந்திய திரையுலகில் யார் மனதையும் புண்படுத்தாத ரொமாண்டிக்-காமெடி இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 41 வயதில் கல்யாண பொண்ணாகும் த்ரிஷா? வைரலாகும் போட்டோ..!

மேலும் படிக்க | உலக சாதனை படைத்த த்ரிஷாவின் படம்! 25 வருஷ பழசு..எந்த படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News