Only Indian Actress To Deny Alimony After Divorce : திரைபிரபலங்கள், காதலிப்பதும்-காதல் உறவில் இருக்கும் போதே பிரிவதும், அல்லது திருமண உறவில் இருந்து விட்டு சில நாட்களில் பிரிவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது புதிதல்ல என்றாலும், அனைத்து விவாகரத்துகளிலும் பெண்ணுக்கு நஷ்ட ஈடு என்பது வழங்கப்படும். ஆனால், இங்கு ஒரு நடிகை தனக்கு ரூ.200 கோடி நஷ்ட ஈட வழங்கப்பட்டும், அதனை வேண்டாமென கூறி மறுத்திருக்கிறார். அதற்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், பலர் அவரது வைராக்கியமே இதற்கு காரணம் என்று நினைக்கின்றனர். அந்த நடிகை யார் தெரியுமா?
வைராக்கியமிக்க அந்த நடிகை..
இந்த நடிகையை நமக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தெரியும். அது மட்டுமல்ல, இவர் தன்னை பல இடங்களில் ‘பல்லாவரம் பொண்ணு’ என அறிமுகப்படுத்தி கொள்வார். அந்த நடிகை யார் என்பதை இந்நேரத்திற்கு கண்டுபிடித்திருப்பீர்கள். அவர் வேறு யாருமில்லை, நம்ம சமந்தாதான்.
ஆரம்ப காலத்தில் மாஸ்கோவின் காவிரி, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார். இவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும், இவரை ரொம்ப பிடித்தது தமிழ் ரசிகர்களுக்குதான். பல்லாவரத்தில் வசித்து வந்த சமந்தா, தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்தான், விவாகரத்தின் போது கொடுக்கப்பட்ட ஜீவனாம்ச தொகையை வேண்டாமென கூறிவிட்டாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணமும்..விவாகரத்தும்..
நடிகை சமந்தா, தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டிருந்த போது நடிகர் நாக சைதன்யாவுடன் நட்பு ஏற்பட்டது. சொல்லப்போனால் இவர்கள் இருவருக்குமே ‘யே மாயா சேசாவே’ படம்தான் முதல் படம். சில ஆண்டுகள் கழித்து இவர்களுக்குள் நெருக்க ஏற்பட, அதன் பின்பு இருவரும் 2017-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், காதல் வாழ்க்கையை போல திருமண வாழ்க்கை செல்லவில்லை. திருமணமான சில மாதங்களிலேயே பிரச்சனை ஏற்பட தொடங்கியது. இறுதியில் இருவருமே 2021ஆம் ஆண்டு பிரிந்து வாழ்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சமந்தாவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்..
நடிகை சமந்தா, தனது விவாகரத்து காலத்தில் மனமுடைந்து இருந்ததை அனைவராலும் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், தங்கள் திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்பது குறித்தோ, தாங்கள் ஏன் விவாகரத்து பெற்றனர் என்பது குறித்தாே இருவருமே வெளியில் பேசிக்கொள்ளவில்லை. இந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இப்படி சமந்தாவின் வாழ்வில் அடிக்கு மேல் அடி விழ, அவர் சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி பிரேக் எடுப்பதாக அறிவித்தார். இதனால், அவர் இப்போது வரை எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார்.
நாக சைதன்யாவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்..
நாக சைதன்யா இன்னும் சிங்கிளாக சுற்றி கொண்டிருக்கும் சமந்தா போல அல்ல. அவர், சமந்தாவை பிரிந்த சில மாதங்களுக்குள்ளாகவே நடிகை சோபிதா துலிபலாவை டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு இருவரும் நிச்சயம் செய்து, இப்போது கணவன்-மனைவியாகவே ஆகி விட்டனர். சிலர் நாக சைதன்யா சமந்தாவை ஏமாற்றியதாக கூறி வந்தனர். இதற்கு அவர் சமீபத்தில், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், சமந்தாவும் தானும் எப்போதோ மூவ்-ஆன் ஆகி விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஷங்கர் மகன் நடிக்கும் முதல் படம்! ஹீரோயினாக விஜய் பட நாயகி..யார் தெரியுமா?
மேலும் படிக்க | தன்னை விட 18 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் தனுஷ்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









