சார்பட்டா பரம்பரை 2 படம் எடுப்பதில் சிக்கல்.. விலகிய முக்கிய நபர்?

சார்பட்ட பரம்பரை ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் பா. ரஞ்சித். 

Written by - R Balaji | Last Updated : Mar 18, 2025, 10:04 PM IST
  • சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றது
  • இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் பா. ரஞ்சித்
  • ஆனால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
சார்பட்டா பரம்பரை 2 படம் எடுப்பதில் சிக்கல்.. விலகிய முக்கிய நபர்?

தமிழ் சினிமாவில் அரசியல் படங்களை எடுப்பதில் பிரபலமானவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும், பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், ஒரு புதிய சிக்கலை சந்திக்க இருக்கிறார் பா. ரஞ்சித். 

Add Zee News as a Preferred Source

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரம், பசுபதி, மால்விகா மோகன் என பிரபலங்கள் பலர் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இச்சூழலில் தற்போது வேட்டுவம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில், அட்டகத்தி தினேஷ், ஆர்யா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இப்படத்திற்கு பின்னர் பா. ரஞ்சித் சார்பட்டா பரம்பரை 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில்தான் பா. ரஞ்சித் புதிய சிக்கலை சந்திக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்களில் இறங்க முடியாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இருப்பினும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்தது. தற்போது வரை பா.ரஞ்சித்தின் படத்தில் பிடித்த படம் என்றால் பலர் தயங்காமல் சர்பட்டா பரம்பரை என கூறுவார்கள். அந்த அளவிற்கு இப்படம் மக்கள் மனதில் இடம் பிடித்தது. 

தயாரிப்பாளர் விலகல்? 

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஆர்யாவும் தயாரிக்கிறார். படத்தின் முக்கிய தயாரிப்பாளராக ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இருந்தது. தற்போது ஜீ ஸ்டூடியோஸ் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் தங்கலான் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாதது என கூறப்படுகிறது. 

மேலும் படிங்க: சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கும் ஷங்கரின் மகன்! அதுவும் பெரிய இயக்குநரின் படம்..

மேலும் படிங்க: OG Sambavam பாடலில் இதை கவனித்தீர்களா? சூப்பர் மேட்டரா இருக்கே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News