)
Dawn Pictures நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்று பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில், படக்குழுவினர் கலந்து கொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
தீ பரவட்டும் #ParasakthiTrailer - https://t.co/I5dCAoGQdG #Parasakthi #ParasakthiFromJan10 pic.twitter.com/ttBz7wzw5s
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 4, 2026
நடிகர் ரவி மோகன் பேசியது, நான் நாயகனாக நடிக்கும் இசை வெளியீட்டு விழாவில் பேசுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கும். ஆனால் எஸ்கே படத்தில் பேசுவது அப்படி இல்லை. பலரின் கடின உழைப்பாளி உருவாக்கப்பட்ட தங்கம் பராசக்தி இந்த வருடத்தின் மிக சிறந்த படமாக பராசக்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இது போன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் இவர் அனைத்துக்கும் தகுதியானவர். அவர் இன்னும் பெரிய மேடை ஏறி பேச வேண்டும் அதற்க்கு நீங்கள்(ரசிகர்கள்) கூடவே இருக்க வேண்டும்.
பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் (சுதா கொங்கரா) இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறது. இந்த தீயை (பராசக்தி) நிறைய பேர் அணைக்க வெளியில் முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு.
பராசக்தியில் ஏன் வில்லனாக பண்ணுகிறீர்கள் என்று நிறைய கேட்டார்கள். எனக்கு ரெண்டே காரணம் தான் இருந்தது ஒன்று சுதாவின் கதை மற்றொன்று சுதா. ஆனால் இந்த முடிவு குறித்து தற்போது நினைத்துப்பார்க்கையில் எந்த கவலையும் இல்லை மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. என்னை இத்தனை நாட்களாக ஹீரோவாக பார்த்தீர்கள் இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள். இப்படி தான் ஜாலியாக பேசுவேன்.
இந்த படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களைப் பற்றிதான் எனக்கு கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன் சுயமரியாதையை மட்டும் இழக்கக்கூடாது. இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் நல்ல மனிதனாக இந்த உலகத்தில் வாழ முடியும். இப்படத்தை எல்லோரும் கொண்டாடுங்கள் நன்றி. “பராசக்தி” திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ