Parasakthi Movie OTT Release : சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம், பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதையடுத்து, இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடந்தது. இதில் முக்கியமாக ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
பராசக்தி திரைப்படம்:
1960களில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு வெளியான படம், பராசக்தி. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவான இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுப்பதற்கு சில பிரச்சனைகள் எழுந்தது. இறுதியில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 10ஆம் தேதி உலகளவில் தமிழைத்தாண்டி இன்னும் பல மொழிகளில் வெளியானது.
நன்றி தெரிவிப்பு விழா:
பராசக்தி திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியிருக்கிறது. இதையத்து, இப்படத்தின் வெற்றிவிழா தற்போது சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இதில், பராசக்தி படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சமீபத்தில் நடந்து. இதில், ஓடிடிரிலீஸ் குறிதத் அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
எப்போ ஓடிடி ரிலீஸ்?
பராசக்தி திரைப்படம், தியேட்டரில் வெளியான எட்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளிவருமாம். இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை, இந்தியாவின் முன்னணி ஓடிடி நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதையடுத்து, வரும் மார்ச் மாதத்திற்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு தகவலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்படலாம்.
வசூல்..
பராசக்தி திரைப்படத்தை Dawn Pictures மற்றும் ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், முதல் நாளில் சுமார் ரூ.27 கோடி உலகவில் வசூலித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் நாளில் படம் ரூ.52 காேடி வசூலை தாண்டியது. இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை ஆரம்பிக்க இருக்கிறது. இதனால், வரும் 15, 16 மற்றும் 17 தேதிகள் மற்றும் வீக் எண்ட்களில், படம் நல்ல வசூலை பெறலாம் என்று கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் முந்தைய இரண்டு படங்கள்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னர் வெளியான அமரன் மற்றும் மதராஸி ஆகிய இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இரு படங்களுமே முதல் நாளில் அதிக வசூலையும் பெற்றன. ஆனால், அதனை பராசக்தி படம் பெறவில்லை. இருப்பினும், கண்டிப்பாக இப்படம் இறுதி நாட்களுக்குள் நல்ல வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









