சகோதர பாசம் என்றாலே பாசமலர்தான்..62 ஆண்டுகளை கடந்த அழகு காவியம்..!
62 Years of Pasamalar: சிவாஜி கணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன் ஆகியோரின் நடிப்பில் 1961ஆம் அண்டு வெளியான பாசமலர் படம் 62 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அண்ணன்-தங்கை பாசத்தை உலகிற்கு உணர்த்திய பாசமலர் படம் வெளியாகி 62 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த படத்தில் சிவாஜி கணேசன்-சாவித்திரி சகோதர-சகோதரியாக நடித்திருந்தனர். ஜெமினி கணேசன் சாவித்திரியின் கணவராக நடித்திருந்தார். ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் நம் அனைவரின் மனங்களில் அழியாத காவியமாய் குடி கொண்டிருக்கும் பாசமலர் படம் குறித்த சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.
மலர்ந்தும் மலராத பாசமலர்:
கூத்து, நாடகம், மேடை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சினிமா பக்கம் திரும்பிய காலம் அது. தெலுங்கு மற்றும் மலையாள பட உலகில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி பாசமலர் படத்திற்காக தங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஜோடி யார் தெரியுமா? உண்மை வாழ்க்கையிலேயே இவருக்கு கணவராக அமைந்த ஜெமினி கணேசன்தான்..!ஆனால் இக்கதை இவர்களது காதல் பற்றி அல்ல. அண்ணன் தங்கை பாசத்தை பற்றி. சாவித்திரிக்கு அண்ணனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். “என் தங்கைதான் எனக்கு எல்லாம்..என் உலகமே அவதான்..” வசனம் இன்றளவும் பல படங்களில் ரெஃபரன்ஸாக உபயோகப்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | Priya Atlee: கேன்ஸ் திரைப்பட விழாவில் ட்வின்னிங் செய்த பிரியா-அட்லீ..!
உண்மையிலேயே அண்ணன்-தங்கை போலத்தான்..
திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் சிவனாகவும், சாவித்திரி பார்வதியாகவும் நடித்திருப்பர். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் படத்தில் சிவன்-பார்வதி வேடத்தில் வரும் இவர்களது போட்டோவையே ஃப்ரேம் போட்டு கும்பிட தொடங்கினர். அந்த அளவிற்கு எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி நடிக்கக்கூடிய திறமைமிகு நடிகர்கள் இவர்கள்.
இதே போலத்தான், இவர்கள் இருவரும் பாசமலர் படத்தில் உண்மையிலேயே சாகோதர சகோதரியாக நடிக்க உண்மையிலேயே இவர்கள் அண்ணன் தங்கை என்று கருதினர் அன்றைய ரசிகர்கள். இவர்களுக்குள் இருந்த பாசமும் அதுபோலத்தான். சிவாஜி, ஜெமினி கணேசனை உண்மையிலேயே “மாப்பிள்ளை..” என்று அழைப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அன்றைய மக்கள் பலர், தங்கள் வீட்டில் ஒரு ஆண் பிள்ளைக்கு அடுத்து பெண் குழந்தை பிறந்தால், அதற்கு ‘ராதா’ என சாவித்திரியின் கதாப்பாத்திர பெயரை வைத்தனர். இப்படி மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு படமாக பார்க்கப்படுகிறது பாசமலர்.
சகோதர பாசத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு:
பாசமலர் படத்தில் வரும் காட்சிகளும் அதன் வசனங்களும் அன்றைய பாலசந்தர் தொடங்கி, இன்றைய கார்த்திக் சுப்பராஜ் வரை, பல இயக்குநர்களின் படைப்புகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். சிவகார்த்திகேயனின் எங்க வீட்டு பிள்ளை படத்தில், பாசமலர் டைலாக்கை ஒரு பாட்டில் உபயோகித்திருப்பர். படத்தில் மட்டுமா? நிஜத்தில் கூட பாசமாக உள்ள அண்ணன் தங்கையை இந்த படத்தின் பெயரை வைத்துதான் குறிப்பிடுவர்.
ரீ-ரிலீஸ்:
தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படைப்புகளுள் ஒன்றாக பார்க்கப்படும் பாசமலர் படம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அது மட்டுமன்றி, இந்தி,தெலுங்கு,கன்னடம் மற்றும் சிங்களத்தில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்து. கடந்த 2013-ல் டிஜிட்டல் உருவாக்கம் செய்யப்பட்டு 70 திரையரங்குகளில் வெளியாகி ஒருமாத காலம் ஓடியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் பார்த்து அழுத ஆயிரக்கணக்கான கண்கள், திரையரங்குகளைத் தேடிவந்து ‘பாசமல’ரைப் பார்த்து மீண்டும் கண்ணீர் உகுத்தது, இன்றைய தலைமுறைக்கு அதிசய செய்தியானது.
அண்ணன் - தங்கையின் பாசத்துக்கும், திரையில் ‘பாசமல’ராக மலர்ந்தபோது, உச்சிமுகந்து கொண்டாடினார்கள் தமிழர்கள். ‘பாசமலர்’ படைத்த சாதனைகளால், என்றைக்கும் வாடாத மலராக மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த படைப்பின் பின்னால், தங்களுடைய ஆகச் சிறந்த பங்களிப்பைத் தந்த ஆளுமைகள் நம்முடைய நினைவுகளில் நீங்காமல் இருக்கிறார்கள்.
“பிறந்தால் இப்படியொரு அண்ணனுடன் பிறக்கனும்..”
“என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..அதுல ஆனந்த கண்ணீரை மட்டும்தான் பாக்கணும்” என்ற வசனம் இன்று வரை பிரபலம். கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும். “நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் இப்படத்திற்கு பிறகு, பாசமலர் படத்தில் நான் தங்கையாக பார்த்த நடிகை சாவித்திரியுடன் இனி ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன்” என கூறயதாக பேசப்படுகிறது. பாசமலர்’ வெளியான தினத்தில் நடிகை சாவித்திரி மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்தாராம். அப்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெண்கள் ‘பிறந்தால் இப்படியொரு அண்ணனுக்குத் தங்கையாகப் பிறக்க வேண்டும்’ என்று பேசிக்கொண்டதாக கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ