Phoenix Movie Review: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ஃபீனிக்ஸ் . ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். மேலும் பீனிக்ஸ் படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனர் ரமேஷ், அபினக்ஷத்ரா, வர்ஷா, நவீன், ரிஷி, நந்தா சரவணன், முருகதாஸ், விக்னேஷ், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் இந்த நடித்துள்ளார்கள். ஜூலை 4 ஆம் தேதி பீனிக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
படத்தின் கதை!
கதையின் நாயகன் சூர்யா விஜய் சேதுபதி ஒரு எம்எல்ஏ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறார்களின் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடக்கின்றன. அதில் இருந்து அவர் எப்படி தப்பித்தார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை பற்றி சுவாரஸ்யமாக சொல்லி இருக்கும் படம் தான் பீனிக்ஸ். சூர்யா சேதுபதிக்கு இது முதல் படம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகள் படம் முழுக்க சிறப்பாக இடம் பெற்றுள்ளது. படத்தின் நாயகன் சூர்யா நன்றாக சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். ஒரு மாஸ் ஹீரோவிற்கு தேவையான அனைத்தையும் முடிந்த வரை தர முயற்சி செய்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும் இன்னும் சிறிது முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம். தேவதர்ஷினி, விக்னேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோரும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்
ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இந்த படத்தை இயக்கி உள்ளதால் ஒவ்வொரு சண்டை காட்சிகளும் அனல் பறக்கிறது. அதே நேரத்தில், உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் நன்றாக இருந்தாலும், இன்னும் நன்றாக எடுக்கப்பட்டு இருக்கலாம். முதல் பாதி அதிரடி சண்டை காட்சிகளுடன் பரபரப்பாக சென்றாலும், இரண்டாம் பாதி சற்று சறுக்குகிறது. இயக்குனர் அனல் அரசு பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக இருந்தாலும் ஒரு இயக்குனராக இன்னும் நிறைய அனுபவம் தேவை. சண்டை காட்சிகள் நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்.
தொழில்நுட்பம் & இசை
வேல்ராஜின் ஒளிப்பதிவில் படம் இன்னும் பிரமாண்டமாக தெரிகிறது. சாம் சிஎஸ் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக பீனிக்ஸ் நல்ல ஒரு படமாக வந்து இருந்தாலும், கதை பழைய பழிவாங்கும் நோக்கத்தில் இருப்பதால் ஒரு வித சலிப்பை தட்டுகிறது. ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு பீனிக்ஸ் நிச்சயம் பிடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிங்க: சித்தார்த்தின் 3 BHK படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!
மேலும் படிங்க: வெற்றிமாறன் படத்தில் 2 ஹீரோக்கள்! ஒன்னு சிம்பு..இன்னொன்னு யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









