)
Police Compliant Filed Against Dimple Hayathi : பிரபல தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாத்தி தன்னை அடித்ததாக, அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் புகார் கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தினை இங்கு பார்ப்போம்.
டிம்பிள் ஹயாத்தி மீது வழக்குப்பதிவு!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர், டிம்பிள் ஹயாத்தி. ஆந்திராவை சேர்ந்த இவர், தமிழில் தேவி 2, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனுஷுடன் அட்ராங்கி ரே என்கிற படத்திலும் சின்ன கதாப்பாத்திரத்தில் வந்திருக்கிறார்.
டிம்பிள் ஹயாத்தி மீது, ஒடிசாவை சேர்ந்த 22 வயது பிரியங்கா பீபர் என்கிற பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அப்பெண் தனது புகாரில், தான் வெஸ்வுட் அப்பார்ட்மெண்டில் இருகும் ஷைக்பேட்டில் வேலை செய்து வருவதாகவும், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல், சம்பந்தப்பட்ட நடிகை டிம்பிள் ஹயாத்தி அங்கு தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
உணவு கொடுக்காமல்..
அந்த புகாரில், அப்பெண் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பகீர் கிளப்பியுள்ளது. தன்னை டிம்பிள் ஹயாத்தியும் அவரது கணவர் டேவிட்டும் தனக்கு போதிய அளவில் உணவு கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் திட்டி துன்புருத்தியதாக கூறியுள்ளார். ஒரு முறை, “என் ஷூவை விட உன் வாழ்க்கை பெரிதல்ல..” என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நாயால் வந்த சண்டை!
இந்த பிரச்சனை, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று பெரிதாகியுள்ளது. அந்த நாளில், வீட்டில் இருந்த நாய் குறைத்துக்கொண்டே இருந்ததால் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அப்போது நடிகை டிம்பிளும் அவரது கணவர் டேவிட்டும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தனது பெற்றோரை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் பிரியங்கா கூறியிருக்கிறார். அதனை தன் செல்போனில் ரெக்கார்ட் செய்ய முயன்றதாகவும், அதற்குள் டேவிட் தன் போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்ததாகவும், தன்னை தாக்கியதாகவும் கூறினார்.
வழக்குப்பதிவு!
பிரியங்கா, தனது உடைகள் கிழிக்கப்பட்டதாகவும் எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஓடி வந்ததாகவும் தன் புகாரில் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடிப்படையாக வைத்து, டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் டேவிட்டின் பெயரில் பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ