தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?

Dhanush D55 Movie Update: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ், தனது 55வது திரைப்படத்தில் நடிக்கிறார். 'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. யார் அந்த நடிகை என்பதை பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 4, 2025, 10:49 AM IST
  • தனுஷின் அடுத்த படமான D54 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
  • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அடுத்து D55 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.
  • பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?

Dhanush D55 Movie Update: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ், தனது 55வது திரைப்படத்தில் நடிக்கிறார். 'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. யார் அந்த நடிகை என்பதை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தமிழ் சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட கலைஞரும், உலக அளவில் அறியப்பட்ட நடிகர் ஆவார் தனுஷ். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார் நடிகர் தனுஷ். திரைப்பயணத்தின் தொடக்கத்தில் பல விமர்சனங்களையும், அவமானங்களையும் சந்தித்த போதிலும், தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தனுஷ்.

கடந்த மாதம் இவரது இயக்கத்தில் வெளியான படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷ் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜி.கே பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியானது. படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இட்லி கடை ஃபீல் குட் படமாக இருக்கிறது என்று கொண்டாடினார்கள். வசூல் ரீதியாக இந்த படம் உலகம் முழுவதும் மொத்தம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனிடையே இந்த படம் சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படி படு பிஸியாக நடித்து வரும் நடிகர் தனுஷின் அடுத்த படமான D54 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அந்த படம் உருவாகிறது. ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டிற்கு சென்ற தனுஷ். அங்கு ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டார். இப்போது கிருத்தி சனோனுடன் சேர்ந்து நடித்திருக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படம் ரிலீஸிற்கு ரெடியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது தமிழில் ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அடுத்து D55 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மீது மக்களுக்கு கட்டாயம் மிக்கப்பறிய எதிர்பார்ப்பு இருக்கும். நடிகர் தனுஷின் அடுத்த படத்திற்கு, புதிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் நாயகியின் தகவலும் வெளிவந்துள்ளது. அதன்படி தனுஷ் நடிக்கும் d55 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜனநாயகன் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா அடுத்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். எனினும் இது தொடர்பாக அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ‘கங்கை அமரனுக்கு என் இவ்வளவு திமிர்?’ வைரலான வீடியோ..நெட்டிசன்கள் காட்டம்!

மேலும் படிக்க | “அப்படியே மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரி..” குழந்தை போட்டோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News