விருது பெற்ற பிரபல பாடகிக்கு தனது காதலனுடன் நிச்சயதார்த்தம்...

அமெரிக்க பாடகி டெமி லோவாடோ நேற்று தன் காதலன் மேக்ஸ் எர்ரிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்தது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

Last Updated : Jul 24, 2020, 03:45 PM IST
விருது பெற்ற பிரபல பாடகிக்கு தனது காதலனுடன் நிச்சயதார்த்தம்... title=

அமெரிக்க பாடகி டெமி லோவாடோ நேற்று தன் காதலன் மேக்ஸ் எர்ரிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்தது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

டெமெட்ரியா டெவொன்னெ "டெமி " லோவாடோ ஒரு அமெரிக்க நடிகை மற்றும் பாடகர்-பாடலாசிரியர். டிஸ்னி சேனல் ஒரிஜினல் திரைப்படம், காம்ப் ராக் மற்றும் எதிர்வரும் அதன் தொடர்களில், காம்ப் ராக் 2: தி ஃபைனல் ஜாம், அவருடைய கதாபாத்திரமான மிட்சி டார்ரெஸ் மற்றும் சன்னி வித் எ சேன்ஸ்ஸில் சன்னி மன்றோ ஆகிய கதாபாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.

நடிப்புத் தவிர அவர் ஒரு தனித்த இசைக் கலைஞரும் கூட, அவர் தன்னுடைய முதல் இசைத்தொகுப்பான டோண்ட் ஃபர்கெட்டை செப்டம்பர் 23, 2008 அன்று வெளியிட்டார். அந்த இசைத்தொகுப்பு பில்போர்ட் 200  #2 இடத்தில் அரங்கேறி, முதல் வாரத்தில் 89,000 க்கும் மேலான பிரதிகளை விற்றது.

லோவாடோ தன்னுடைய இரண்டாவது இசைத் தொகுப்பான ஹியர் வி கோ அகெய்ன்-ஐ ஜூலை 21, 2009 அன்று வெளியிட்டார். அந்த ஆல்பம் பில்போர்ட் 200 இல் #1 இடத்தில் அரங்கேறி முதல் வாரத்தில் 108,000க்கும் மேலான பிரதிகள் விற்பனை ஆனது.

இவர் சாய்ஸ் டிவி பிரேக்அவுட் ஸ்டார் - பெண்", ALMA விருதுகள், நிக்லோடியன் ஆஸ்ட்ரேலியன் கிட்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ் 2009 போன்ற விருதுகள் பெற்றுள்ளார். 

இந்நிலையில் அமெரிக்க பாடகி டெமி லோவாடோ நேற்று தன் காதலன் மேக்ஸ் எர்ரிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்தது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த ஜோடி தங்களது நிச்சயதார்த்த செய்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் அவர்களது போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். 

Trending News