)
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படம் நாளை (ஆகஸ்ட் 14) உலகமெங்கம் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால், வெளியாவதற்கு முன்பே வசூல் வேட்டை செய்து வருகிறது. குறிப்பாக கூலி படம் LCUவில் (லேகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) வருமா? என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு லேகேஷுக்கு நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி பாம் பண்ணும் வாய்ப்பு கிடைத்து. இப்படம் பெரிய ஹிட்டாக, அதைத்தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய 5 படங்களில் மாஸ்டர் மற்றும் மாநகரம் படத்தை தவிர்த்து மீதமுள்ள மூன்று படங்களுமே LCU-வில் வருகின்ற படம்தான்.
LCU (லேகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்)
கைதி படத்தில் இருந்துதான் இது தொடங்கியது. கைதி படத்தில் ஹிரோவாக நடித்திருந்த கார்த்தி, விக்ரம் படத்தின் ஒரு காட்சியில் வருவார். அதாவது அவரின் குரல் மட்டும் அப்படத்தில் வரும். அதேபோல், கைதி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜார்ஜ் மரியன், லியோ படத்தில் விஜய்யின் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வருவார். ஒரு காட்சியில் கைதி படத்தில் நடந்த சம்பவம் குறித்து விஜய் கேட்பதுபோல் அமைத்திருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில்தான், லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் கூலி திரைப்படமும் LCUவில் வருமா? என கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. முன்னதாக கூலி LCUவில் உள்ளதா? என்று லேகேஷ் கனகராஜிடம் கேட்டதற்கு, அவர் இல்லை. இப்படம் தனி கதையை கொண்டது என கூறி இருந்தார். ஆனால் டிரெய்லரில் வரும் டைலாக் மற்றும் இப்போது வெளியாகி இருக்கும் போஸ்டர் ரசிகர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிரெய்லரில் வரும் டைலாக்
கூலி படத்தின் டிரெய்லரில், சத்யராஜ், 30 வருஷமா ஒருத்தன் ஆஃப் லைன்ல வச்சிருக்கேன் என்ற வசனம் பேசி இருப்பார். இதேபோல், விக்ரம் படத்திலும் 30 வருஷமா ஒருத்தர் கோஸ்ட்டா வாழ்ந்திருக்கார் என்ற வசனம் வரும்.
போஸ்டரால் குழப்பம்
அதேபோல் தற்போது வெளியாகி இருக்கும் கூலி படத்தின் போஸ்டர் ஒன்றில், CVL என்று தலைகீழாக எழுதப்பட்டுள்ளது. இதனை Coolie, Vikram, Leo என ரசிகர்கள் டீகோட் செய்து விவாதித்து வருகின்றனர்.
எழுத்தாளர் சந்துரு
கூலி படத்தின் திரைக்கதை எழுத்தாளர் சந்துரு, கூலி படம் குறித்து ஒரு பேட்டியில் பேசி உள்ளார். அதில், கூலி படத்தில் நிச்சயமாக ஒரு சப்ரைஸ் உள்ளது. ஆனால் படம் LCUவில் வருமா அல்லது வராதா என்பதை நீங்கள் படம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் என அவர் கூறினார்.
கூலிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு
கூலி படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர் கான், செளபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என நட்சத்திர பட்டாலமே நடித்துள்ளது. இது ஒரு எதிர்பார்ப்பாக இருந்தாலும், லோகேஷ் - ரஜினி கூட்டணி, LCU போன்றவை மற்றொரு பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. கூலி திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் திரையரங்குகளில் பதில் கிடைத்துவிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ