ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1

ரசிகர்களின் விருப்பத் தேடலில் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளியீடான  ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 24, 2025, 05:34 PM IST
  • ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’
  • Google தளத்தில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது
ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீன கால குடும்ப உறவுகளின் விசித்திரங்களையும், டிஜிட்டல் சோஷியல் மீடியா குடும்பங்களில் எவ்வளவு தாக்கத்தை உருவாக்குகிறது என்பதையும், நகைச்சுவை கலந்து, ஒரு அருமையான ஃபேமிலி எண்டர்டெயினராக சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் பாராட்டுச்செய்திகளைத் தொடர்ந்து, ரசிகர்கள் இணையத்தில் படத்தைப் பற்றி அதிகம் தேட, Google டிரெண்டிங்கில் இப்படம் முதலிடத்தைப் பிடித்தும் சாதனை படைத்துள்ளது. 

எழுத்தாளர் ஷாரிஸ் முகமது எழுதியுள்ள இப்படத்தை ,அறிமுக இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் இயக்கியுள்ளார்.

பிரைடல் பொட்டிக் வைத்திருக்கும் 40 வயது முதிரிளம் இளைஞனான பிரின்ஸ் சக்கலக்கல் (திலீப்), இன்றைய ZenG தலைமுறை இளைஞியை (சஞ்சு) மணக்கிறார். இதனால் அவர் வாழ்விலும், குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் திரைக்கதை பரபர சம்பவங்களுடன், பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்படி, வெகு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், சோஷியல் மீடியா, குடும்பங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை, அழகாக பிரதிபலித்திருக்கும் இந்தப்படம், தமிழக மக்களின் வாழக்கையையும் பிரதிபலிப்பது போல அமைந்திருப்பதால், இப்படத்தின் தமிழ் பதிப்பும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 

பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி படத்தில் தியான் ஸ்ரீனிவாசன், சித்திக், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன், நடிகை ஊர்வசி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனைத்து வயதினரும் கொண்டாடும் ஃபேமிலி எண்டர்டெயினரான இப்படம், ஜூன் 20 முதல், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. 

Google-ல் ரசிகர்களின் விருப்பத் தேடலில், டிரெண்டிங்கில் #1 இடத்தைப் பிடித்திருக்கும் இப்படத்தை, ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தவறாமல் கண்டு ரசியுங்கள்!

மேலும் படிக்க | போலீசார் பிடியில் நடிகர் ஸ்ரீகாந்த்... போதைப் பொருள் பயன்படுத்தினாரா? - தீவிர விசாரணை

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கைபற்றிய Netflix.. எத்தனை கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News