பிரித்விராஜ் நடிக்கும் "நோபடி" படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

Nobody Movie Update: பிரித்விராஜுடன் இணைந்து பார்வதி நடிக்கும் ‘நோபடி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2025, 04:20 PM IST
  • 'நோபடி' படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியானது
  • பிரித்விராஜ் இந்த படத்தினை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்விராஜ் நடிக்கும் "நோபடி" படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

முன்னணி நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து மற்றும் ஹக்கிம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள #NOBODY திரைப்படம், எர்ணாகுளத்தில் உள்ள அழகிய வெலிங்டன் தீவில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் துவங்கியது. 

Add Zee News as a Preferred Source

பிரம்மாண்டமாக உருவாகும் #NOBODY திரைப்படத்தினை சமீர் அப்துல் எழுதியுள்ளார். புகழ்பெற்ற முன்னணி படைப்பாளி நிசாம் பஷீர் இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில், அற்புதமான நடிகர்களின் நடிப்பில், அழகான திரை அனுபவமாக உருவாகிறது. 

இந்த படத்தை பிருத்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுப்ரியா மேனன், முகேஷ் மேத்தா மற்றும் சி.வி. சாரதி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். அனிமல் திரைப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முன்னனி தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் #NOBODY ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகிறது. 

படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

நடிகர்கள்:
பிருத்திவிராஜ் சுகுமாரன்
பார்வதி திருவோடு
அசோகன்
மதுபால்
ஹக்கிம் ஷாஜஹான்
லுக்மான் அவரன்
கணபதி
வினய் ஃபோர்ட் 

தொழில் நுட்ப குழு :
இயக்கம் - நிசாம் பஷீர்
எழுத்தாளர் - சமீர் அப்துல்
ஒளிப்பதிவு - தினேஷ் புருஷோத்தமன்
இசை - ஹர்ஷவர்தன் (அனிமல் புகழ்)
நிர்வாக தயாரிப்பாளர் - ஹாரிஸ் டெசோம்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் - ரின்னி திவாகர்
தயாரிப்பு வடிவமைப்பு - கோகுல் தாஸ்
ஆடை வடிவமைப்பு - தன்யா பாலகிருஷ்ணன்
ஒப்பனை - ரோனெக்ஸ் சேவியர்
புரமோசன் - போஃபாக்டியோ

மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?

மேலும் படிக்க | ரெடியா மாமே.. முதல் நாளில் ரூ.50 கோடி வசூல்.. அஜீத்-தின் குட் பேட் அக்லி பாசிட்டிவ் எனர்ஜி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News