)
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு, தனது தேர்ந்த நடிப்பால் பான்-இந்திய ஸ்டாராக உயர்ந்துள்ளார். ஆனால், அவரது திரைப்பயணத்தில் அவர் தவறவிட்ட அல்லது நிராகரித்த சில முக்கிய படங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் முதல் டோலிவுட் வரை அவர் வேண்டாம் என்று சொன்ன 6 படங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். 'ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸில் ராஜி கதாபாத்திரத்தில் மிரட்டியதன் மூலம் வட இந்தியாவிலும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஆனால், இதற்கு முன்பே பல பிரம்மாண்ட வாய்ப்புகள் அவரை தேடி வந்துள்ளன. பல்வேறு காரணங்களால் அவர் நிராகரித்த அந்தபடங்கள் பிற்காலத்தில் பெரிய வெற்றியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்ட படம் 'புஷ்பா'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த 'ஸ்ரீவள்ளி' கதாபாத்திரத்திற்காக முதலில் அணுகப்பட்டது சமந்தாவைத்தானாம். ஆனால், அந்த முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்க மறுத்த சமந்தா, அதே படத்தில் இடம்பெற்ற "ஊ சொல்றியா மாமா" என்ற ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாட சம்மதித்தார். அந்த பாடல் உலகளவில் ட்ரெண்டானது தனிக்கதை என்றாலும், ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தை அவர் தவறவிட்டது ரசிகர்களுக்கு வியப்பை அளித்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநரான கரண் ஜோஹர், தனது 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்' படத்தில் சமந்தாவை அறிமுகப்படுத்த விரும்பியதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் நுழைய இது ஒரு பொன்னான வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால், அந்த சமயத்தில் தென்னிந்தியப் படங்களில் பிஸியாக இருந்ததாலோ என்னவோ, சமந்தா அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.
2015-ம் ஆண்டு ராம் சரண் நடிப்பில் வெளியான படம் 'புரூஸ் லீ'. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இயக்குநர் முதலில் சமந்தாவைத்தான் அணுகினார். ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் சமந்தாவால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் ப்ரீத் சிங் அந்த வாய்ப்பை பெற்றார்.
நானி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'தசரா'. 2018-லேயே இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க சமந்தாவிடம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் அவர் இந்த வாய்ப்பையும் நிராகரித்தார். பின்னர் கீர்த்தி சுரேஷ் அந்த பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைக் குவித்தார்.
கன்னடம் மற்றும் தமிழில் வெற்றி பெற்ற 'யூ டர்ன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சமந்தாவே நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. ஆனால், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டபோது, மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார். ஒரே கதையில் மீண்டும் நடிக்க விருப்பமில்லாததால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாற்றை பேசும் 'என்.டி.ஆர். கதாநாயகடு' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவை அணுகியுள்ளனர். ஆனால், இந்த வரலாற்று சிறப்புமிக்க படத்திலும் நடிக்க அவர் சம்மதிக்கவில்லை. சினிமாவில் வாய்ப்புகள் வருவதும், போவதும் சகஜம் என்றாலும், சமந்தா போன்ற ஒரு டாப் நடிகை இத்தனை பெரிய படங்களை நிராகரித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்த படங்களில் அவர் நடித்திருந்தால், அவரது மார்க்கெட் மதிப்பு இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்குமா என்பது விவாதத்திற்குரியதே.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ