)
R Madhavan Net Worth 2025: வசீகரமிக்க நடிகர்களில் மாதவனும் ஒருவர். அலைபாயுதே படத்தில் திரையுலகதிற்கு அறிமுகமானார் நடிகர் மாதவன். முழுக்க முழுக்க காதல் மட்டும் வழிந்தோடும் படமாக அலைபாயுதே அமைந்தது. அதில் மாதவனின் லுக்கும், நடிப்பும் அவருக்கென ஆண் ரசிகர்களை மட்டுமின்றி பெண் ரசிகைகளை கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக கௌதம் மேனன் இயக்குநராக அறிமுகமான மின்னலே படத்தில் கொஞ்சம் ஆக்ஷன் அவதாரம் எடுத்து Maddy என்கிற முத்திரையை பெற்றார் மாதவன். படம் மெகா ப்ளாக் பஸ்டர். தொடர்ந்து டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால் என வெரைட்டில் சப்ஜெக்ட்டில் நடித்த கெத்து காண்பித்தார்.
தொடர்ந்து நடித்து வந்த இவர் சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டில் இறுதிச்சுற்று படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தினார் நடிகர் மாதவன். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்தார். அப்படி அவர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ராகெட்ரி என்ற படத்தை இயக்கினார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் நடிகராக படத்தில் மாதவன் அசத்திவிட்டார். அதேசமயம் இயக்குநராக அவர் மேலும் மெனக்கெட்டிருக்க வேண்டுமென பலர் வெளிப்படையாகவே கூறினர். மேலும் இனி படம் எதுவும் இயக்கும் ஐடியாவில் இல்லை தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாகவும் மாதவனும் கூறியிருந்தார். அண்மையில் கேசரி 2 படத்தில் அக்ஷய் குமாருடன் வழக்கறிஞர் நெவில் மெக்கின்லேவாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் மாதவன். அதேபோல் அஜய் தேவ்கனின் சைத்தான் படத்தில் மாதவன் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.
இப்படி ஹிந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார், சமீபத்தில் டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இந்நிலையில் மாதவனுக்கு 55 வயதாகும் நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அவருக்கு மொத்தம் 115 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் ஒரு பிரமாண்ட பங்களா, மும்பையில் ஒரு பங்களா வைத்திருக்கும் அவரிடம், 80 லட்சம் ரூபாயில் ஒரு பென்ஸ் கார், ஒரு கோடி ரூபாயில் ஒரு ரேஞ்ச் ரோவர் கார், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோட் மாஸ்டர் க்ரூஸர், 27 லட்சம் மதிப்புள்ள யமஹா வி மேக்ஸ், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW பைக், 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி உள்ளிட்ட பைக்குகள் இருக்கின்றன. அதனுடன் இவர் ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ