)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியானது. இப்படம் குறித்த அறிவிப்பின்போதே ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் பல மொழி ஹீரோக்களை அழைத்து வந்ததுதான். கன்னட மொழி ஹீரோவான உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள பட நடிகர் சௌபின் சாகிர், போதாக்குறைக்கு ஹிந்தியில் இருந்து அமீர் கான் என ஒரு நட்சத்திர பாட்டாளத்தையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இறக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் இடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
படம் ரூ. 1000 கோடியை வசூல் செய்யும் என பலரும் கூறி வந்தனர். முதலில் படம் வெளியான போது அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் படத்தின் விமர்சனம் கலவையாகவே வந்தது. படத்தில் லாஜிக் ஓட்டைகள் அதிகமாக இருக்கிறது என ரஜினி ரசிகர்கள் சிலரே படத்தை குறை கூறினர். இருப்பினும் படத்தின் வசூல் பெரிதாக பாதிக்கப்படவில்லை. வெளியான 4, 5 நாட்களிலேயே ரூ. 400 கோடி வசூலை செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வாய்யை திறக்காத சன் பிக்சர்ஸ்
ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் பின் வசூல் தொடர்பான அறிவிப்பை அறிவிக்கவில்லை இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. அவ்வப்போது இவ்வளவு வசூல் ஆனது என தகவல்கள் மட்டுமே கிடைத்தது. தற்போது கூலி படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில், மொத்த வசூல் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலி ஒர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
ரூ. 675 கோடி வசூல்
கூலி படம் வெளியாகி நெகட்டிவ்வான விமர்சனங்கள் பரவி வந்தாலும், படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை. எனக்கு கிடைத்த தகவலின்படி, கூலு படம் உலக அளவில் ரூ. 675 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. ஜெயிலர் படம் 25வது நாள் முடிந்ததும், கலாந்தி மாறன் அனைவருக்கும் பரிசளித்தார். அதேபோல் கூலி படத்திற்கும் விரைவில் அப்படி ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என செய்யாறு பாலி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் எவ்வளவு
கூலி படம் வெளிநாட்டுகளில் பெரிய அளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலு வட அமெரிக்காவில் இப்படம் சுமார் 6.8 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல், அங்கு வெளியான கமல்ஹாசனின் அனைத்து படங்களின் வசூலை விட அதிகம் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ