)
Coolie Vs War 2 Reviews : சுதந்திர தினத்தையொட்டி, கூலி மற்றும் வார் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானது. இரு படங்களும் பான் இந்திய அளவில் வெளியானதையொட்டி, இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
கூலி Vs வார் 2:
கூலி திரைப்படம், ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு போட்டியாக இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் உருவான வார் 2 படமும் ரிலீஸாகி இருக்கிறது.
கூலி படம், ஆக்ஷன் த்ரில்லராக படமாக உருவாகி இருக்கிறது. அதே போல, வார் 2 படமும் சண்டை காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி இருக்கிறது. இதில், ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
கூலி விமர்சனம்:
கூலி திரைப்படத்திற்கு படம் வெளியான முதல் ஷோவில் இருந்து கலவையான விமர்சனங்கள் மட்டுமே வந்த வண்ணம் உள்ளன. காரணம், ரசிகர்கள் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகளுடன் தியேட்டருக்கு சென்றிருக்கின்றனர். அது மட்டுமன்றி, படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரத்தின் முன்பு, பிற கேரக்டர்களை டம்மியாக காண்பித்து விட்டார் லோகேஷ் கனகராஜ். படத்தின் கதை கொஞ்சம் மனதில் ஒட்டாததும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.
வார் 2 விமர்சனம்:
வார் 2 திரைப்படமும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களுள் ஒன்றாகும். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ரித்திக் ரோஷன் எதிரெதிரே மோதுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எதிரியாக இருக்கும் இவர்கள், பின்னர் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய வில்லனை எதிர்ப்பது கதையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு தமிழகத்தை பொருத்தவரை தியேட்டர்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த ஷோக்களும் கிட்டத்தட்ட ஃபுல்லாகவே இருக்கின்றன. இந்த படத்தை பார்த்த ரசிர்களும், படம் சுமாராக இருப்பதாகவே கூறி வருகின்றனர். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என்பதும் அவர்களின் கூற்றாக இருக்கிறது.
இரண்டில் எது ஓகே?
கூலி படத்துடன் வார் 2 திரைப்படம் வெளியாவது, இந்திய அளவில் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இதனை தென்னிந்திய vs வட இந்திய சினிமாவின் போட்டியாக பார்த்தனர். இறுதியில் இரண்டு படங்களுமே ‘சுமார் ரகம்’ என்கிற விமர்சனங்களே வந்திருக்கின்றன. எனவே இருண்டுமே ஓகே ரகம் ஒன்லி என்று வெளியில் பேசிக்கொள்கின்றனர். கூலி படம் உலகளவில் ரூ.170 கோடி வசூலித்திருப்பதாகவும், வார் 2 படம் 50 கோடியை தாண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டம்:
கூலி திரைப்படம், ரஜினி ரசிகர்களுக்கான படமாக பார்க்கப்படுகிறது. இதில் லாஜிக் ஓட்டைகள் பல இருந்தாலும் சுத்தமான ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டமாக இருக்கிறது. அதே நேரத்தில், படத்தின் இசையும் இதனை பெரிதாக தூக்கி கொடுத்துள்ளது. இருப்பினும் வீக் எண்டில் படம் கலக்ஷனை அள்ளி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ