)
Coolie Movie Update: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், சத்யராஜ் உள்ளிட்ட பல பான் இந்திய நடிகர்களும் நடித்திருக்கின்றனர். இப்படி பவர்ஃபுல்லான நடிகர்கள் கூட்டம் இப்படத்தில் இருக்கும் நிலையில், படத்தின் கதையும் அதற்கு ஏற்றார் போல நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்பும் மக்களிடையே தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், மதுரை அரசரடி பகுதியில் இருக்கக்கூடிய சோலைமலை திரையரங்கில் மதுரை மாநகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், வழக்கம்போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என முதல் நாள் முதல் காட்சி நடைபெறும் என்றும் திரையரங்கில் வாங்கிய விலைக்கே ரசிகர்களுக்கு கூலி படத்தின் ரசிகர் சிறப்புக் காட்சி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல் உங்கள் காட்சி பார்க்க முடியாத நலிந்த ரஜினி ரசிகர்கள் மாற்றுத்திறனாளி ரஜினி ரசிகர்களுக்கு இலவச சிறப்புக் காட்சி டிக்கெட்டை தர இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் முதல் காட்சி பார்க்க வரும் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி உருவம் பொறித்த பல வண்ண டீ சர்ட் களை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கோரிக்கை ஒன்றையும் வைத்தனர்.
அதாவது நீண்ட நாட்களாகவே ரசிகர்களாக இருக்கும் ரஜினி ரசிகர்களை அவர்களது குடும்பத்தினரோடு இணைந்து புகைப்படம் எடுக்க ரஜினி பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும் கூலி படம் வெற்றி பெற வேண்டி நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோவிலில் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு கோவில் பிரகாரத்தினை சுற்றிஅங்க பிரதட்சணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
படம் ரிலீஸ் ஆகும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் காட்சிக்கு வரும்பொழுது வித்தியாசமான முறையில் ரஜினி கூலி படத்தில் தோன்றும் கதாபாத்திரத்தை போன்று வர உள்ளதாகவும் மதுரை ரஜினி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ