)
Coolie Review: சென்னையில் மேன்சன் வைத்து நடத்திக் கொண்டு வருகிறார் ரஜினி. அவருடைய நீண்டகால நண்பர் சத்யராஜ் இறந்து விடுகிறார் என்ற தகவல் கிடைக்கவே அவரை பார்க்க செல்கிறார். அவருக்கு சுருதிஹாசன் உட்பட 3 மகள்கள் உள்ளனர். பணத்திற்காக வில்லன் நாகார்ஜுனாவிற்கு உதவி செய்து வந்துள்ளார் சத்யராஜ். அவர் இறந்து போகவே அவரது மகளான ஸ்ருதிஹாசனை அந்த வேலையை செய்ய சொல்லி கட்டாயப்படுத்திக்கிறார் நாகார்ஜுனா. தனது நண்பனை யார் கொலை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க ஸ்ருதிஹாசனிற்கு உதவி செய்கிறார் ரஜினி. இறுதியில் சத்யராஜை யார் கொன்றது? ரஜினி அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? நாகார்ஜுனா யார்? என்பதே கூலி படத்தின் கதை.
லோகேஷ் கனகராஜ் தனது வழக்கமான பாணியில் கூலி படத்தை எடுத்துள்ளார். அவருக்கே உறுத்தான ஸ்டைலில் மொத்த படமும் உள்ளது. ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தில் ஒரு கம்பீரமான, உடல் உழைப்பு மிகுந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 'கபாலி'க்குப் பிறகு இது அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்று என்று சொல்லலாம். மேலும், அவரது திரை ஆளுமையும், பழைய காலத்து ஸ்டைலையும் சிறப்பாக உள்ளது. வில்லனாக நாகார்ஜுனா ஈர்க்கிறார். பல இடங்களில் கைத்தட்டல்களையும் பெறுகிறார். ஸ்ருதிஹாசனிற்கு படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம், அதில் அவர் தனித்து நிற்கிறார். படத்தின் மெயின் ஹைலைடே ஸ்ருதிஹாசன் என்று சொல்லலாம்.
தனது முதல் தமிழ் படத்திலேயே, அமீர் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நன்றாக நடித்துள்ளார். அவரது நடிப்பு, திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவர்களை தவிர சத்யராஜ், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். லோகேஷின் இயக்கம் ஸ்டைலாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. ஆழமான கதை உருவாக்கம், கதைசொல்லல், ஸ்டைலான மேக்கிங், சண்டைக் காட்சிகள் என அவரது தனித்துவமான இயக்கம் தொடர்ந்துள்ளது.
தொழில்நுட்ப அம்சங்கள்
அனிருத் ரவிச்சந்தரின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ரஜினிகாந்துடனான அவரது வெற்றிக் கூட்டணி இந்த படத்திலும் தொடர்கிறது. 'மோனிகா', 'சிக்கிடு', மற்றும் 'பவர்ஹவுஸ்' போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக 'மோனிகா' பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனம் திரையங்குகளை அதிர வைக்கிறது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் கூலிக்கு வலு சேர்க்கிறது.
படத்தின் பிரமாண்டம் கதையில் உள்ள குறைகளை மறைக்கிறது. இருப்பினும் சில காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்கிறது. அது படம் பார்க்கும் நமக்கு ஒரு வித சோர்வை ஏற்படுத்துகிறது.
ரஜினியின் ப்ளாஷ்பேக் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். விக்ரம் மற்றும் லியோ படத்தை போலவே இந்த படத்திலும் ஒரு சார்பிரைசை லோகேஷ் வைத்துள்ளார். அது நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. மொத்தத்தில் கூலி ரஜினி ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி என்று சொல்லலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ