Rajinikanth Jailer 2 Latest Update : ரஜினிகாந்த் நடித்த கூலி படம் தியேட்டரில் ஓடி வரும் நிலையில், அடுத்ததாக அவர் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் கதை என்னவாக இருக்குமோ என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Rajinikanth Jailer 2 Latest Update : கடந்த சில மாதங்களாக ‘கூலி-கூலி’ என்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய ஹைப் இருந்தது. இந்த நிலையில், படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், அவர் அடுத்ததாக நடித்து வரும் ஜெயிலர் 2 படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023ல் வெளியான படம், ஜெயிலர். தோல்வி முகத்தில் இருந்த ரஜினிக்கு இப்படம் பெரிய திருப்பத்தை கொடுத்தது. பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் படத்தின் ஹைப்பை பெரிதாக ஏற்றியது. அது மட்டுமன்றி, படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராப், மோகன்லால், சிவராஜ் குமார் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம், இரண்டாம் பாகத்தின் லீட் உடன் முடிந்தது. தற்போது, ஜெயிலர் 2-வின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ரஜினிகாந்தின் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் கதாப்பாத்திரம் இந்த படத்திலும் தொடர்கிறது. முந்தைய படத்தில் வந்த அனைவரும், இந்த படத்திலும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- #SJSuryah plays an important role in #Rajinikanth's #Jailer2.
— Movie Tamil (@_MovieTamil) August 21, 2025
- pic.twitter.com/3kP5YFYBNH
ஜெயிலர் 2 படத்தில் இணைந்திருக்கும் புதிய நடிகர் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் வேறுயாருமில்லை, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாதான். இவர், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவருக்குறிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். பல ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, இதுவரை ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடித்ததே இல்லை. இதுதான் இருவரும் இணையும் முதல் படமாகும்.
அடுத்த படம்?
ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்தை முடித்த பிறகு அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கூலி வெளியாகி இருக்கும் நிலையில், ஜெயிலர் 2விற்கு அடுத்த படத்தையும் லோகி கையில் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கப்போவதாகவும், இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்குமா?
ரஜினி படம் வெளியாகும் போது, அது கண்டிப்பாக லாபம் பார்த்து விடும் என்பது அனைவருக்கும் தெரியும். காரணம், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அவ்வளவு பெரிது. அதே போல, அவரும் ரொம்ப மோசமான கதைக்கொண்ட படத்தில் எல்லாம் நடித்ததில்லை. எனவே, அவருடைய அனைத்து படங்களும் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆகத்தான் இருக்கிறது. சமீபத்தில் நடித்திருந்த கூலி படம், மக்களை பெரிதாக திருப்தி படுத்தவில்லை என்றாலும் அவர்களை முழுதாக மகிழ்ச்சிப்படுத்தாமல் அனுப்பவில்லை. எனவே, ஜெயிலர் 2 படத்திலிருந்தும் அதையே எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ