ரஜினியின் ‘கூலி’ படம் ரிலீஸ் தேதி.. படக்குழு வெளியிட்ட அப்டேட்

ரஜினியின் ‘கூலி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 4, 2025, 08:02 PM IST
  • கூலி படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு
  • சத்யராஜும் ரஜினியும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் பணியாற்றுகின்றனர்.
ரஜினியின் ‘கூலி’ படம் ரிலீஸ் தேதி.. படக்குழு வெளியிட்ட அப்டேட்

Coolie Movie Release Date: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் படம் கூலி. தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம், தற்போது சூட்டிங் முடிந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று ராசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்த நிலையில் இது தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

கூலி திரைப்படம்:
தமிழ் சினிமாவில் 2025 ஆம் உருவாகி வரும் படங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.  இது ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக உருவாக்கிய வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், தேவா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

கூலி படத்தில் நடித்திருப்பவர்கள்..
கூலி திரைப்படத்தில், நாகார்ஜுனா, உப்பேந்திரா உள்ளிட்ட சில பான்-இந்திய நடிகர்கள் இருக்கின்றனர். அதே போல, நடிகர் சத்யராஜும் ரஜினியும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் பணியாற்றுகின்றனர். ஸ்ருதிஹாசன், ப்ரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் மகளாக நடிக்கிறார். இந்த படத்தின் பிஹைண்ட் தி சீன்ஸ் புகைப்படங்கள் லோகேஷ் கனகராஜ்ஜின் பிறந்தநாளையொட்டி வெளியானது. இதில் சில கதாப்பாத்திரங்களின் தோற்றமும் ரிவீல் ஆனது.

கூலி படத்தின் ரிலீஸ் தேதி:
இந்நிலையில் தற்போது இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த படம் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு வேலைகள் கொஞ்சம் இழுத்திடித்ததால், இதன் ரிலீஸ் ஆகஸ்ட்-க்கு தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. படக்குழுவும் அதற்கேற்றவாறு, வேலைகளை துரிதமாக முடித்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்திலும் வெளியாகிறது.

மேலும் படிக்க | அஜித்துடன் மோதும் ரஜினி! கூலி படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

மேலும் படிக்க | விடாமுயற்சி-குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் எது? இயக்குநர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News