கூலி படத்துக்கு ஆப்பு! தள்ளிப்போகும் ரிலீஸ்? காரணம் இதுதான்..

Coolie Movie Release Postponed : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 17, 2025, 12:25 PM IST
  • கூலி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
  • வேறு பெரிய படத்தால் வந்த ஆபத்து..
  • எந்த படம்? முழு விவரம்..
கூலி படத்துக்கு ஆப்பு! தள்ளிப்போகும் ரிலீஸ்? காரணம் இதுதான்..

Coolie Movie Release Postponed : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் படம் கூலி. தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம், தற்போது முடிக்கப்படும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது ஏன் தெரியுமா? இங்கு அதுக்குறித்து  பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

கூலி திரைப்படம்:

தமிழ் சினிமாவில் 2025ல் உருவாகி வரும் படங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.  இது ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக உருவாக்கிய வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், தேவா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

கூலி திரைப்படம், இந்த ஆண்டின் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு வேலைகள் கொஞ்சம் இழுத்திடித்ததால், இதன் ரிலீஸ் ஆகஸ்ட்-க்கு தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. படக்குழுவும் அதற்கேற்றவாறு, வேலைகளை துரிதமாக முடித்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதத்திலும் வெளியாவதற்கு புதிதாக ஒரு ஆப்பு கிளம்பியுள்ளது.

Coolie

வேறு படம் ரிலீஸ் ஆகுதா? 

கூலி படம் பான்-இந்தியா படமாக உருவாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்த கதை. இதன் காரணமாகத்தான் லோகி, மலையாளத்திலிருந்து செளபின் சாகிர், கன்னடத்தில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகார்ஜுனா, இந்தியில் இருந்து அமீர்கான் உள்ளிட்டோரை நடிக்க வைத்திருக்கிறார். 

இந்த பான்-இந்தியா ரிலீசுக்கு அச்சுறுத்தலாக, பெரிய படம் ஒன்று ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியில் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் வார் 2 திரைப்படம் தான் ஆகஸ்ட்டில் வெளியாக இருக்கிறது. இதில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியரா அத்வானி என்ன பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் கூலி படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வேறு மாதத்திற்கு தள்ளி போகலாம் என கூறப்படுகிறது. இதனால் படக்குழுவின் கவலை கொண்டுள்ளனர்.

கூலி படத்தில் நடித்திருப்பவர்கள்..

கூலி திரைப்படத்தில், மேற்கூறியவாறு நாகார்ஜுனா, உப்பேந்திரா உள்ளிட்ட சில பான்-இந்திய நடிகர்கள் இருக்கின்றனர். அதே போல, நடிகர் சத்யராஜும் ரஜினியும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் பணியாற்றுகின்றனர். ஸ்ருதிஹாசன், ப்ரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் மகளாக நடிக்கிறார். இந்த படத்தின் பிஹைண்ட் தி சீன்ஸ் புகைப்படங்கள் லோகேஷ் கனகராஜ்ஜின் பிறந்தநாளையொட்டி வெளியானது. இதில் சில கதாப்பாத்திரங்களின் தோற்றமும் ரிவீல் ஆனது.

மேலும் படிக்க | கூலி படத்தின் டீசர் எப்போது? வெளியான தகவல்!

மேலும் படிக்க | கூலி படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் நாயகி!! தமன்னா கிடையாது-வேறு யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News