சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு படையப்பா வெளியானது. இந்த நிலையில், மீண்டும் நேற்று (டிசம்பர் 12) சுமார் 25 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டே இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. படையப்பா படம் அப்போதே பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கினார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் ரஜினிகாந்த்துடன் சிவாஜி கனேஷன், லட்சுமி, ராதா ரவி, நாசர், ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா, செந்தில் உள்ளிட்ட நட்சத்திர பட்டாலமே நடித்திருந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகும் நல்ல வரவேற்பு
இப்படம் ரீ-ரிலீஸ் ஆகி தற்போதும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடுகிறது என்றால் அதற்கு இந்த நடிகர்களும் காரணம். சிவாஜி, ரம்யா கிருஷ்ணன் என சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் கூட ரசிக்கும்படியாக நடிந்தனர்.ரஜினிகாந்த்தின் ஐ-கானிக் படங்களில் ஒன்றாக படையப்பாவும் திகழ்ந்து வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் இடையே உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது. புது படம் ரிலீஸ் ஆனது போல படத்திற்கு நல்ல மக்கள் கூட்டம். சென்னையில் கிட்டத்தட்ட பல தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆனது. இதனால் மீண்டும் வசூல் வேட்டையில் இடம் பெற்றுள்ளது படையப்பா திரைப்படம்.
படையப்பா வசூல் எவ்வளவு?
படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் சுமார் 3 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இப்படம் ரீ- ரிலீஸ் ஆவதற்கு முன்பே கில்லி ரீ-ரிலீஸ் கலெக்ஸனை முறியடிக்கும் என கூறப்பட்டது. ஆனால் முதல் நாள் நிலவரப்படி படையப்பா படம் கில்லி ரீ-ரிலீஸ் வசூலை முறியடிக்கவில்லை. கல்லி படம் ரீ-ரிலீஸ் ஆன போது முதல் நாள் வசூலாக ரூ. 3.1 கோடி வசூல் செய்தது. ஆனால் படையப்பா படம் ரூ. 3 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக மட்டுமே தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ் சினிமா வரலாற்றில் ரீ- ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் வசூல் அதிகம் செய்த படமாக கில்லியே உள்ளது.
மேலும் படிக்க: Padayappa Re Release : முதல் நாள் கலக்ஷன்! கில்லியை மிஞ்சி விடுமா? கணிப்பு இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









