இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. ஷூட்டிங் முடிந்து திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், கன்னட நடிகர் உபேந்திரா, நாகர்ஜூனா, சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ரஜினி - லோகேஷ் கூட்டணி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்து வருகிறார். பா. ரஞ்சித்துடன் காலா, கபாலி, கார்த்திக் சுப்புராஜூடன் பேட்ட, நெல்சனுடன் ஜெய்லர் என இளம் இயக்குநர்களுடன் பணித்ததை அடுத்து லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்தார். லோகேஷ் கனராஜும் கைதி, விக்ரம், லியோ என ஹிட் படங்களை இயக்கி தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே போதை பொருள், கொலை என சம்பவங்கள் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில், இப்படம் தங்கம் கடத்தல் கும்பல் குறித்து இருக்கும் என தெரிகிறது. தொடக்கத்தில் இப்படத்தின் டைட்டில் டீசரில் கூட தங்கம் இடம் பெற்றிருந்தது. அதை வைத்து பார்க்கையில், இப்படம் தங்கம் தொடர்பான கதைகளத்தை கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமீபத்தில் கூட இப்படத்தில் உள்ள பாட்டின் டீசன் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானது. இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாகவும் உள்ளது. ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார்.
டீசர் எப்போது?
இந்த நிலையில், கூலி படத்தின் டீசன் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கூலி படத்தின் டீசர் வரும் மார்ச் 14 ஆம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் அனிரூத் கூலி படத்தின் இசையை முழுமையாக முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டதாக கூறப்படுகிறது. கூலி படத்தின் டீசர் குறித்த தகவலை கேட்ட ரஜினி ரசிகர்கள் வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிங்க: ஜன நாயகன் படத்தில் சர்ப்ரைஸ்! விஜய்யுடன் நடனமாடும் 3 பிரபலங்கள்-யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









