Lokesh Kanagaraj Coolie First Review: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் படம் கூலி. தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம், தற்போது சூட்டிங் முடிந்துள்ளது. அதன்படி இந்த படத்தின் தற்போது படத்தின் இசையமைப்பாளர் தன்னுடைய கருத்தை தெரிந்துள்ளார்.
கூலி திரைப்படம்:
தமிழ் சினிமாவில் 2025 ஆம் உருவாகி வரும் படங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இது ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக உருவாக்கிய வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், தேவா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கூலி படத்தில் நடித்திருப்பவர்கள்..
கூலி திரைப்படத்தில், நாகார்ஜுனா, உப்பேந்திரா உள்ளிட்ட சில பான்-இந்திய நடிகர்கள் இருக்கின்றனர். அதே போல, நடிகர் சத்யராஜும் ரஜினியும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் பணியாற்றுகின்றனர். ஸ்ருதிஹாசன், ப்ரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் மகளாக நடிக்கிறார். இந்த படத்தின் பிஹைண்ட் தி சீன்ஸ் புகைப்படங்கள் லோகேஷ் கனகராஜ்ஜின் பிறந்தநாளையொட்டி வெளியானது. இதில் சில கதாப்பாத்திரங்களின் தோற்றமும் ரிவீல் ஆனது.
கூலி படத்தின் ரிலீஸ் தேதி:
இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அதாவது வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.
#COOLIE FROM 14 AUGUST 2025@rajinikanth sir @anirudhofficial bro @iamnagarjuna sir @nimmaupendra sir #SathyaRaj sir #SoubinShahir sir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off @sunpictures #CoolieFromAug14 pic.twitter.com/vqyLJFW7Il
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 4, 2025
கூலி படத்தின் முதல் விமர்சனம்:
இந்நிலையில் கூலி திரைப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத், தற்போது படத்தை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை கூறியுள்ளார். அதன்படி அவர் கூலி திரைப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டேன். வேறொரு ஷேடில் உள்ளது. சூப்பராக இருக்கும். உற்சாகமாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
#Coolie - I have Watched Almost Whole Film.. It's a New Shade.. Looks Really Ominous & Superb.. So Excited..
- #Anirudh in a Recent Interview pic.twitter.com/VnoXb9qk3L— Laxmi Kanth (@iammoviebuff007) May 3, 2025
மேலும் படிக்க | ஜன நாயகன் படத்தில் 3 தோற்றங்களில் வரும் விஜய்! வைரலாகும் போட்டோஸ்..
மேலும் படிக்க | விஜய் டிவியில் இருந்து விலகிய பிரியங்கா? உண்மை இதுதான்! பிரபலம் சொன்ன விஷயம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









