Paranthu Po 3BHK Phoenix Box Office Collection : ஜூலை மாதத்தின் ஆரம்பத்திலேயே, புதுப்பட ரிலீஸ்களால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். அதிலும், மக்களால் கொண்டாடப்படும் இயக்குநராக இருக்கும் ராமின் திரைப்படம் பல நாட்களுக்கு பின்பு வெளியாகி இருப்பது, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்துடன் சேர்ந்து குடும்ப டிராமாவாக 3BHK திரைப்படமும் வெளியாகியுள்ளது. கூடவே, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்திருக்கும் ஃபீனிக்ஸ் படமும் வெளியாகி இருக்கிறது. இதில், எந்த படம் வசூலில் டாப் என்பதை இங்கு பார்ப்போம்.
3BHK:
சித்தார்த், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம், 3BHK. மீதா ரகுநாத் மற்றும் தேவயானி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தினர்களுக்கும் இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன் 8 தோட்டாக்கள், குருதியாட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
3BHK திரைப்படம் வீடு வாங்க வேண்டும் என்று கனவோடு இருக்கும் பல நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது. சித்தார்த் மற்றும் சரத்குமாரின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படம், முதல் நாளில் உலகளவில் சுமார் ரூ.1.5 கோடி வரை கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பறந்து பாே:
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு உள்ளிட்ட வெகு சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் இருக்கிறார் ராம். இவர், பல நாட்களுக்கு பின்பு இயக்கியிருக்கும் படம், பறந்து போ. மிர்சி சிவா ஹீரோவாக முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, விஜய் ஏசுதாஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
துருதுருவென இருக்கும், அதிகமாக கனவுகள் காணும் குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படும் பெற்றோரின் வாழ்வை எளிமையாக சொல்லும் படமாக இருக்கிறது பறந்து போ. இந்த படத்தில், சிவா மற்றும் அவருக்கு குழந்தையாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், உலகளவில் சுமார் ரூ.90 லட்சத்தை கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஃபீனிக்ஸ்:
திரை பிரபலங்களின் பிள்ளைகள் சினிமாவிற்குள் வருவது இது முதன்முறையல்ல. கடின உழைப்பால், ‘மக்கள் செல்வன்’ ஆக மாறிய விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதன்முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஃபீனிக்ஸ். ஆக்ஷன் டிராமாகவாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். படம், முழுக்க முழுக்க ரத்தக்களறியாக இருப்பதாகவும், அதைத்தாண்டி எமோஷனலாகவும் படம் கனெக்ட் ஆவதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம், முதல் நாளில் சுமார் ரூ.10 லட்சம் வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
யார் டாப்?
இதுவரை வெளியான வசூல் விவரங்களின் படி, 3BHK திரைப்படம் அதிக வசூல் பெற்ற படமாக இருக்கிறது. அடுத்தாக, பறந்து போ படமும் ஃபீனிக்ஸ் படமும் இருக்கின்றன. இந்த வசூல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சித்தார்த்தின் 3 BHK படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!
மேலும் படிக்க | 3BHK, ஃபீனிக்ஸ், பறந்து போ: 3ல் எது டாப்? எது Flop? ரசிகர்களுக்கு பிடித்த படம் எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









