Childhood Photo of Samantha Ruth Prabhu: கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபல நடிகை சமந்தாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவின் நட்சத்திர நாயகியாக விளங்குபவர், நடிகை சமந்தா. பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களின் நடித்து ரசிகர்களின் மனங்களின் இடம்பெற்றார். தற்போது இந்திய அளவில் பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரை நட்சத்திரங்கள் சிலரை டேட்டிங் செய்த போதிலும், இவர் காதலில் விழுந்தது, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிடம்தான்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ஜோடியாக நடித்த இவர்கள், அப்போது நல்ல நண்பர்களாக இருந்தனர். வருடங்கள் உருண்டோட, சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். பெரிய அளவில், நடந்த இவர்களின் திருமணம், 3 ஆண்டுகள் கூட நீடிக்காமல் கடந்த 2021ஆம் ஆண்டில் இருவருமே பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இப்படி சமந்தாவின் வாழ்வில் அடிக்கு மேல் அடி விழ, அவர் சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி பிரேக் எடுப்பதாக அப்போது அறிவித்து இருந்தார்.
இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் சிட்டாடல்: ஹனி பனி என்கிற தொடரில் பணியாற்றினார். இந்த தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இவர் த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனம் தயாரிப்பில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அண்மையில் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக 'சுபம்' திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படி தனக்கென தனி இடத்தை பிடித்து வெற்றியின் உச்சத்தில் பிரபல நடிக்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை சமந்தாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா தலைநிறைய பூவுடன் அழகாக போஸ் கொடுத்திருக்கிறார். கொழுக்கு மொழுக்கு என இருக்கும் சமந்தாவின் இந்த சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருவதுடன், பலர் ஷேர் செய்தும் வருகின்றனர்.
13 ஆண்டுகளை சினிமாவில் கடந்து அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது பங்காரம் படம் மற்றும் Rakt Brahmand: The Bloody Kingdom வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கைதி 2 படத்தின் ஹீரோயின்! ஏற்கனவே கார்த்தியுடன் நடித்தவர்-யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ