Rashmika Mandanna VS Vijay Devarakonda: யார் பெரிய பணக்காரர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Rashmika Mandanna VS Vijay Devarakonda: நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ள உள்ள நிலையில், தற்போது இவர்களின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.    

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 4, 2026, 11:43 AM IST
  • ராஷ்மிகா மந்தனாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் திருமணம்
  • பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் நடக்கப்போகுதாம்
  • உதய்பூரில் ஒரு பிரம்மாண்ட திருமண திருவிழா
Rashmika Mandanna VS Vijay Devarakonda: யார் பெரிய பணக்காரர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Rashmika Mandanna VS Vijay Devarakonda: திரையுலகில் தற்போது மிகப்பெரிய முக்கிய தலைப்பாக நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இடம்பெற்றுள்ளனர். நெடுநாள் காதலர்களாக இருந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த டிரெண்டிங் காதல் ஜோடிகளுக்கு இடையே இந்த படங்களின் போதுதான் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தன. இருப்பினும், அவர்கள் தங்களுக்குள்ளான உறவு என்ன என்பது குறித்து எங்குமே வெளியில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் திருமணம் நடப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, ராஷ்மிகா மந்தனாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதன்படி பிப்ரவரி மாதத்தில் 26 ஆம் தேதி திருமணம் நடக்கப்போவதாக கடந்த சில நாட்களாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஒரு சிலர் உதய்பூரில் ஒரு பெரிய திருமணத்திற்கு ஏற்பாடு நடந்து வருவதாகவும், இதில் மணமக்களின் பெயர் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா என்றும் தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதுடன் இது தொடர்பான வீடியோக்கள் செம வைரலாகி வருகிறது. இதனால், விஜய் தேவரகொண்டாவிற்கும் ராஷ்மிகாவிற்கும் திருமணம் ஆகப்போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதே உண்மை.

இதனிடையே சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவிடயம் திருமணம் குறித்து கேள்வி கேட்டபோது, யாருடைய திருமணம்? எனக் கேட்டிருந்தார் ராஷ்மிகா. அதுமட்டுமின்றி இவர்களின் திருமணம் செய்து உறுதிப்படுத்தும் வகையில் ராஷ்மிகா, விஜய் குடும்பத்தினர் ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஹோட்டலில் தங்கி திருமண ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனுடன் இவர்களது திருமணம், இவர்களது நிச்சயதார்த்தம் போலவே ரகசியமாக நடக்கப்போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது திருமண செய்து ஒருபக்கம் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் ரூ. 15 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான மாளிகையில் வசிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு நிகர மதிப்பு ரூ. 50 முதல் 60 கோடி வரை இருக்கும். இது தவிர, இவர் தனது ஆடை பிராண்ட் வணிகம் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான கிங் ஆஃப் தி ஹில் என்டர்டெயின்மென்ட் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யிடம் ஏராளமான ஆடம்பர கார்கள் இருப்பதாகக் கூறுகிறது. மிகவும் விலையுயர்ந்த கார் வால்வோ XC90 ஆகும், இதன் விலை சுமார் ரூ. 85 லட்சம். அதைத் தவிர, அவர் BMW 5 சீரிஸ், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஃபோர்டு மஸ்டாங் ஆகியவற்றையும் வைத்திருக்கிறார், இவை அனைத்தும் சுமார் ரூ. 65-75 லட்சம் விலை கொண்டவை. ஒரு தனியார் ஜெட் விமானத்தின் உரிமையாளர் ஆவார்.

மறுபுறம் ராஷ்மிகா மந்தனா பற்றி பேசுகையில், தற்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார். தற்போது இவர் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ. 65 கோடி என்றும் கூறப்படுகிறது. பெங்களூரில் ரூ. 8 கோடி மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது-பட விழாவில் சாய் தன்ஷிகா பேச்சு!

மேலும் படிக்க | மேக்-அப் இல்லாமல் ருக்மிணி வசந்த்..எப்படியிருக்கிறார் பாருங்க! வைரல் போட்டோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News