Jana Nayagan Movie: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். அவர் கட்சியை பொதுவெளியில் அறிவித்த அன்றே The Goat திரைப்படத்திற்கு பிறகு, ஒப்பந்தம் செய்திருக்கும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, சினிமாவுக்கு முழுக்கு போட இருப்பதாக அறிவித்திருந்தார்.
Jana Nayagan Movie: விஜய்யின் கடைசி திரைப்படம்
ஒருபுறம், விஜய் அரசியல் வருகையை வரவேற்றிருந்தாலும், அவர் சினிமாவில் இருந்து வெளியேறுவது பலருக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது எனலாம். அந்த வகையில், விஜய்யின் கடைசி மற்றும் 69வது படத்தை ஹெச். வினோத் இயக்க இருப்பது உறுதியானது. இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான KVN Productions தயாரிக்கிறது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு 'ஜனநாயகன்' என கடந்த ஜனவரியில் பெயரிடப்பட்டது. இந்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. இருப்பினும், விஜய்யின் அரசியல் கொள்கை சார்ந்து இத்திரைப்படம் உருவாக்கப்படலாம் என்பதால் நிச்சயம் 2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டியே வெளியாகும் கூறப்பட்டது.
Jana Nayagan Movie: 200% விஜய் படம்
இருப்பினும், பட விழாவில் ஜனநாயகன் திரைப்பட இயக்குநர் ஹெச். வினோத் பேசியபோது, ஜனநாயகன் திரைப்படம் 200% விஜய்யின் படமாகவே இருக்கும் என்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்து, அனைத்து தரப்பினரும் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கில் பாலையா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் மறு ஆக்கம் என கூறப்பட்டது. ஆனால் அதையும் படக்குழுவினர் மறுத்துவிட்டனர் எனலாம். அப்படியிருக்க, விஜய்யின் கடைசி படம் என்பதாலேயே ஜனநாயகன் திரைப்படம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. கடந்த வருடம் The Goat திரைப்படம் மட்டுமின்றி, அவரின் கில்லி திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆனது. அந்த படமும் வசூலில் சக்கைப்போடு போட்டது.
Jana Nayagan Movie: ஜன. 9ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ்
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் நேற்று (மார்ச் 24) அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அதாவது, ஜனநாயகன் திரைப்படம் அடுத்தாண்டு ஜன.9ஆம் தேதி அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனநாயகன் படப்பிடிப்பும் விரைவிலேயே முடிய இருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
Jana Nayagan Movie: ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது ஏன்?
ஜனநாயகன் திரைப்படம் ஏன் இந்தாண்டு ரிலீஸ் ஆகாமல், அடுத்தாண்டு பொங்கலை ஒட்டி வெளியாகிறது என பலருக்கும் கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தே விஜய் ஜனநாயகன் திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறார் என்று ஒரு தரப்பு கருதுகின்றனர். அதேபோல், விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது என்ற காரணத்தால் தான் அவர் ஜனவரி மாதத்திற்கு ரிலீஸை தள்ளிவைத்தார் என தரப்பும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Jana Nayagan Movie: 2 படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு
ஆனால், இதற்கு பின் வேறொரு கதை இருப்பதாக பேஸ்புக்கில் சேஷாத்ரி தனசேகரன் என்பவர் பதிவிட்டுள்ளார். தமிழரான இவர் நார்வே நாட்டில் வசித்து வருகிறார்.இவர் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது அவர் பேஸ்புக் பக்கத்தில் அவரது பதிவுகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், தமிழ் சினிமா குறித்தும் அவர் பல்வேறு தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் எனலாம்.
அந்த வகையில், நேற்று ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு குறித்து அவர் போட்ட பேஸ்புக் பதிவில்,"நேற்று இரண்டு பெரிய படங்களின் ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஒன்று ஜனநாயகன், இன்னொன்று ராம்சரண் நடிக்கும் RC 16. இதில் ஜனநாயகன் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடைகிறது. RC -16 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.
Jana Nayagan Movie: நெட்பிளிக்ஸால் தள்ளிப்போன ஜனநாயகன்!?
இரண்டு படங்களுமே 2025க்குள் ரீலீஸ் செய்ய தான் திட்டம் இருந்தது. ஆனால் OTT உரிமை விற்கவில்லை. இவர்கள் கேட்கும் விலைக்கு வாங்கக் கூடிய ஒரே நிறுவனம் நெட்பிளிக்ஸ் மட்டுமே. அவர்களின் இந்த வருடத்திற்கான பட்ஜெட் பெரிய படங்களுக்கு முடிந்துவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த வருஷம் வேண்டுமானால் படம் ரிலீஸ் செய்யப்பட்டால் தான் வாங்கிக்கொள்வதாக நெட்பிளிக்ஸ் கூறியிருப்பதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "நெட்பிளிக்ஸ் கேட்ட தொகையில் 60% மட்டுமே மற்ற ஓடிடி நிறுவனங்கள் கேட்கின்றன. ஏற்கனவே ஹீரோவும் பெரிய சம்பளம் வாங்கிட்டார். எனவே ஓடிடி உரிமம் விற்காமல் ரீலீஸ் செய்தால் தோல்வி என்று தான் தள்ளி வைத்திருக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
Jana Nayagan Movie: சச்சின் ரீ-ரிலீஸ்
இதுதான் ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதற்கான காரணம் என கூறப்படுகிறது. இந்த வருடம் விஜய்யின் படம் வேறு இல்லையோ என கவலைப்பட வேண்டாம், வரும் ஏப். 18ஆம் தேதி சச்சின் ரீ-ரிலீஸ் ஆகிறது என்பது நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | என் வாழ்க்கை முழுமை அடைந்ததாக உணர்நதேன் - அஸ்வத் மாரிமுத்து
மேலும் படிக்க | வீர தீர சூரன் படம் எப்படி உள்ளது? வெளியானது முதல் விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









