Reason Why Nayanthara Never Acted With Kamal : ‘கமல்ஹாசன்’ என்கிற பெயரை கேட்டாலே பலருக்கும் ‘இந்திய சினிமா’ என்றுதான் காதில் ஒலிக்கும். இவரை, அப்படிப்பட்ட லெஜண்ட் நடிகராக பலர் கருதுகின்றனர். இவரருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றால், எந்த நடிகையாக இருந்தாலும் அந்த வாய்ப்பு கிடைக்கையில் கப்பென பிடித்துக்கொள்வர். ஆனால், ஒரே ஒரு நடிகையால் மட்டும் இன்னும் கமலுடன் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்க முடியவில்லை. அவர் வேறு யாருமில்லை நயன்தாராதான்.
நயன்தாரா-கமல்:
நடிகை நயன்தாரா, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கிறார். இவரை டாப் நடிகை என்று சொல்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக சொல்லப்படுவது இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் என்பதால்தான். குறிப்பாக தமிழில், ரஜினி, அஜித், விஜய், விக்ரம், விஷால் என பல முன்னணி மற்றும் முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி, பாலைய்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். மலையாளத்திலும் அதே போல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஆனால், இதுவரை அவர் தமிழில் கமலுடன் மட்டும் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடித்ததே இல்லை.
கைநழுவிய வாய்ப்பு!
நயன்தாராவிற்கு கமலுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்ததில்லை. அப்படி கிடைத்த சில வாய்ப்புகள் கைநழுவி போயிருக்கின்றன. சமீபத்தில் வெளியாகி, பெரும் விமர்சனத்திற்குள்ளான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுக்கு ஜாேடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், நயன்தாராவின் கால்ஷீட் அந்த சமயத்தில் கிடைக்காமல் போயிருக்கிறது. இதனால், அவருக்கு பதிலாக த்ரிஷாவை அப்படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர்.
மர்மயோகி படத்தில்..
கமல்ஹாசனின் கனவு படங்களுள் ஒன்றாக இருக்கிறது, ‘மர்மயோகி’. இந்த படத்தில் அவரே நடித்து இயக்க இருந்தார். இதிலும், நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். கடைசியில் பட்ஜெட் மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாக, அந்த படத்தையே எடுக்க முடியாமல் போயிருக்கிறது.
நயன்தாரா, தான் எந்த படங்களில் நடித்தாலும், அதில் தன் கதாப்பாத்திரம் குறித்து எழுதப்பட்டிருக்கும் விஷயத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டுவார் என்று கூறப்படுகிறது. இதனாலும், சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் இவருடன் சேர்ந்து நடிக்க தயங்குவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
மணிரத்னம் படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை..
நயன்தாரா, இதுவரை மணிரத்னமின் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. தன் படத்தில் ஏற்கனவே நடிக்க வைத்த கதாநாயகிகளையே அவர் மீண்டும் அத்தனை படங்களிலும் நடிக்க வைப்பதால், அவருடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இருவருமே ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதை வைத்திருப்பதை சில மேடை நிகழ்ச்சிகளில் பார்க்க முடிந்திருந்தது.
மேலும் படிக்க | நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் இன்று.. அவரது சொத்து மதிப்பு என்ன? முழு விவரம்!
மேலும் படிக்க | சினிமாவிற்கு வரும் முன் நயன்தாராவின் முகம்! எப்படியிருக்கு பாருங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









