Reason Sundar C Opted Out Of Thalaivar 173 : கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கப்போகும் ‘தலைவர் 173’ படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை இயக்கப்பாேவது சுந்தர்.சி என்கிற அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து சுந்தர்.சி இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
தலைவர் 173-சுந்தர்.சி விலகல்:
ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த பெரும் கேள்வி எழுந்தது. அப்போதுதான், எதிர்பாராத விதமாக கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனுடன் சேர்த்து, இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அருணாச்சலம் படத்தை இயக்கிய சுந்தர்.சி, பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் கைக்கோர்ப்பது பலருக்கு ஆச்சரியமானதாக இருந்தது.
அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, தான் இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த முடிவை தான் எடுப்பதாகவும், ரஜினி-கமல் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இவர் இப்படி இந்த படத்திலிருந்து விலக காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருக்கின்றனர்.
பிரபலம் போட்ட ட்வீட்:
திரையுலகில் ஆக்டிவாக இருக்கும் நபர்களுள் ஒருவர், பிரசாந்த் ரங்கசாமி. சினிமா விமர்சகரான இவர், தனியாக ஒரு யூடியூப் சேனலையும் வைத்திருக்கிறார். இவர், தனது எக்ஸ் தள பக்கத்தில் சுந்தர்.சி படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.
Director Sundar C narrated one liner of a Joly light hearted story .
Rajini sir was not happy , wanted mass elements etc .
Sundar C figured out that he is not the person for it . Hence dropped out .
But looks like there are efforts to bring him back . Let’s wait for the…
— Prashanth Rangaswamy (@itisprashanth) November 14, 2025
அதாவது, சுந்தர்.சி ரஜினியிடம் கூறியது ஒரு லைட் ஹார்டட், மகிழ்ச்சியான கதை என்றும், ரஜினிக்கு இதில் விருப்பம் இல்லாததால் மாஸான காட்சிகளை படத்தில் சேர்க்குமாறு கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். சுந்தர்.சி ‘இது தனக்கு செட் ஆகாது’ என்பது புரிந்த பின்பு படத்திலிருந்து விலகியதாக தெரிவித்திருக்கிறார். இப்போது மீண்டும் அவரை இப்படத்தில் இணைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக பிரசாந்த் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இது உண்மையா?
பிரசாந்தின் ட்வீட்டிற்கு கமெண்ட் செய்திருக்கும் ஒருவர், “உங்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது? நான் சுந்தர்.சியின் துணை இயக்குநர்” என்று கேட்டிருக்கிறார். எனவே, பிரசாந்த் கூறியிருக்கும் விஷயம் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.
பிற படங்களிலும் கமிட் ஆனாரா?
சுந்தர்.சி, தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் விஷால் தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக கூறப்பட்டது. விஷால் படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை அவர் இயக்க செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், முதலில் ரஜினி படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி விட்டது. அதிக கமிட்மெண்ட்களில் சிக்கியதால் அவர் ரஜினி படத்திலிருந்து விலகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | தலைவர் 173ல் இருந்து சுந்தர்.சி விலகல்! அடுத்த இயக்குநர் யாரா இருக்கும்?
மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகை! 13 வருடங்களுக்கு பின்பு கோலிவுட் ரீ-எண்ட்ரி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









