சச்சின் ஒரிஜினல் ரிலீஸின் போது தோல்வி! காரணம் ‘இந்த’ படத்தின் ரிலீஸ்..

Reason Vijay Sachien Movie Faced Flop : நடிகர் விஜய் நடித்து, 2005-ல் வெளியான சச்சின் திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த படம், ஒரிஜினல் ரிலீஸின் போது தோல்வியடைந்தது. ஏன் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 18, 2025, 01:17 PM IST
  • சச்சின் படம் ரீ-ரிலீஸ்!
  • ஒரிஜினல் ரிலீஸின் போது தோல்வி..
  • ஏன் தெரியுமா?
சச்சின் ஒரிஜினல் ரிலீஸின் போது தோல்வி! காரணம் ‘இந்த’ படத்தின் ரிலீஸ்..

Reason Vijay Sachien Movie Faced Flop : விஜய் நடிப்பில், 2005ல் வெளியான சச்சின் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி இருக்கிறது. இப்படம் ஒரிஜினலாக வெளியாகும் போது, தோல்வி அடைந்தது. ஏன் தெரியுமா?

சச்சின் திரைப்படம்:

தமிழ் திரை உலகில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரொமான்டிக் காமெடி திரைப்படங்களில் ஒன்று சச்சின். துருதுரு நடிகராக இருக்கும், நடிகர் விஜய் இந்த படத்தில் கல்லூரிக்கு செல்லும் இளைஞனாக நடித்திருப்பார். பலருக்கும், இப்படத்தில் ஷாலினியாக நடித்திருந்த ஜெனிலியா மீது பெரிய கிரஷ் இருந்தது. தனக்கு ஒரு காதலி கிடைத்தால் அவர் இவர் போல் எடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறி வந்தனர். 

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை, விஜய்யின் குறும்புத்தனமான நடிப்பு, வடிவேலுவின் காமெடி, படம் எடுக்கப்பட்ட விதம் என படத்தில் பல பிளஸ் பாயிண்ட்டுகள் இருந்தன. அதேபோல விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்த படமாகும். இத்தனையும் இருந்தும், இந்த படம் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவியது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? 

இந்த ஒரு படம் தான் காரணம்..

சச்சின் படம் 2005ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. அதனுடன் சேர்த்து வெளியான இன்னொரு படம், சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். 

ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், மாளவிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இருந்தது. இதிலும் வடிவேலுவும் காமெடி ஜெயித்திருக்கும். மேலும் குடும்ப சென்டிமென்ட், காதல், நல்ல பாடல்கள் என ரசிகர்களை கவரும் பல விஷயங்களும் இந்த படத்தில் இருந்தது. 

Sachien

அந்த விடுமுறை காலத்தில் தியேட்டருக்கு எந்த படத்திற்கு செல்வது என்று யோசித்த மக்கள், சந்திரமுகி படத்திற்கே சென்றனர். இதனால் படத்துடன் சேர்ந்து வெளியான சச்சின் படம், தோல்வியை தழுவியது. சந்திரமுகி திரைப்படம் ஒரு ஆண்டிற்கும் மேலாக திரையரங்குகளில் ஸ்கிரீன் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கமல் படமும் வெளியானது..

2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டின் போது சந்திரமுகி-சச்சின் திரைப்படங்கள் மட்டுமில்லை. கூடவே கமல்ஹாசனின் ஒரு படமும் வெளியானது. இந்த படத்தின் பெயர் மும்பை எக்ஸ்பிரஸ். பெரும்பாலானூருக்கு இந்த படம் வெளியானதே தெரியவில்லை. இதில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மனுஷா கொய்ராலா நடித்திருப்பார். ஒரே நேரத்தில், தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம் இது. இவர்களுடன் சேர்ந்து சந்தான பாரதி, வையாபுரி, கோவை சரளா, பசுபதி உள்ளிட்ட பலர் இது நடித்திருப்பர். இந்த படம், சச்சின் படத்தை விட பெரும் தோல்வி அடைந்தது.

சச்சின் ரீ-ரிலீஸ்:

சச்சின் திரைப்படம், இதுவரை பலமுறை பிரபல டிவி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி இருக்கிறது. அப்போதெல்லாம் இந்த படத்தை பார்த்து ரசித்த மக்கள், இதனை திரையரங்குகளிலும் பார்க்க நினைத்தனர். பலர், கோரிக்கை விடுத்ததை அடுத்து ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று, இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. காட்சிகளும், இசையும் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. ரசிகர்கள், இதற்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | இன்று ரீ-ரிலீஸ் ஆகும் சச்சின் படம்! எப்படி இருக்கிறது Re-Mastered வெர்சன்?

மேலும் படிக்க | சச்சின் படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோ ஆக வேண்டியவர்! இப்போ இறந்துட்டாரு..யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News