பிக் பாஸ் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரவீனா. பிக் பாஸ் செல்வதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் சென்ற பிறகு இவருக்கு அதிக ரசிகர் பட்டாளங்கள் குவிந்தது. மேலும் தனது அசத்தலான நடனத்தின் மூலமும் பலரது மனதை கவர்ந்திருந்தார் நவீனா. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாக இருந்தது.
மேலும் படிங்க: கஜினி படத்தில் நான் நடிக்க வேண்டியது.. ஆனால்! மனம் திறந்த நடிகர்
சிக்கலில் சிக்கிக்கொண்ட ரவீனா
பிக் பாஸ் முடிந்த பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரவீனாவிற்கு அழைப்பு வந்தது. ஆனால் தற்போது அவரது எதிர்காலமே பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது. சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ரவீனா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார், பிரகாஷ் என்பவருடன் இணைந்து நடனமாடி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்த சமயத்தில் மணியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருடன் நெருக்கும் காட்டுவதில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் ரவீனாவிற்கு பல ஆபர்கள் வந்தது. சிந்து பைரவி என்ற சீரியல் நடிக்க முதலில் கமிட்டானார் ரவீனா. ஆரம்பத்திலேயே ரவீனாவிடம் இந்த சீரியலில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர், அதில் ஒருவராக நீங்கள் நடிக்கிறீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ஆரம்பத்திலேயே சொல்லி விடுங்கள், நாங்கள் வேறு ஒரு வேறு ஒருவரை கமிட் செய்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இருப்பிடம் இந்த சீரியலின் புரமோ ஷூட்டில் கலந்து கொண்டுள்ளார் ரவீனா. ஆனால் அதன் பிறகு என்னால் நடிக்க முடியாது என்று வெளியேறி உள்ளார். 100 எபிசோடுகளில் நடிக்க கமிட்டான ரவீனா இவ்வாறு தெரிவித்ததால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். எப்போது சூட்டிங்கிற்கு கூப்பிட்டாலும் நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன், வெளிநாடுகளில் இருக்கிறேன் என்று தெரிவித்து வந்துள்ளார்.
ரவீனா மீது நடவடிக்கை
இந்நிலையில் தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ரவீனா மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரவீனாவை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் எந்த ஒரு சின்னது திரை தொடர்களிலும் நடிக்க வைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரவீனாவிற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதிருத்தியில் உள்ளார். மேலும் ஜீ தமிழ் தொடரில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் படிங்க: அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் முதல் படம்! வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கிள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









