Pooja Hegde Next Movie Hero : தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர், ரெட்ரோ படத்தை அடுத்து நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ரெட்ரோ நாயகி..
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம், ரெட்ரோ. கங்குவா தோல்விக்கு பிறகு இப்படம், அவருக்கு கம்-பேக் படமாக அமையும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். 1993ல் நடப்பது போல இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பூஜா வின்டேஜ் ஹீரோயினாக வருகிறார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த “ஆத்தி சந்தனக்கட்ட..” பாடலுக்கு இவர் ஆடிய நடனம்தான், தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. பூஜாவிற்கு இப்படத்தில் மிகவும் முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர், இப்படத்திற்கு பிறகு யாருடன் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்பாேது வெளியாகி இருக்கிறது.
முதல் முறையாக ஜோடி..
பூஜா ஹெக்டே, ரெட்ரோ படத்தை அடுத்து எந்த ஹீரோவுடன் இணைய இருக்கிறார் தெரியுமா? அவர் 41 வயதான துல்கர் சல்மான்தான். இது, ஒரு தெலுங்கு படம் என்றும், இயக்குநர் ரவி இயக்கும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் பூஜா ஹெக்டேவும் துல்கர் சல்மானும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது, இவர்கள் முதல் முறையாக ஜோடி சேரும் படமாகும்.
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூஜா, சில வருடங்கள் இந்தியில் கால் பதிக்க ஆரம்பித்தார். இதையடுத்து, இந்த இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் தெலுங்கில் இப்படம் மூலம் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். அது மட்டுமல்ல, பூஜா ஹெக்டே முதலில் சீதா ராமம் திரைப்படத்தில் மிருணாள் தாகூரின் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அதில் நடிக்க முடியவில்லை. இதனால், இப்படத்தில் அவருக்கு துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடிக்க இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.
பூஜா ஹெக்டே:
வெகு சில தமிழ் படங்களிலேயே நடித்திருந்தாலும், பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட நாயகி பூஜா ஹெக்டே. வட இந்தியாவை சேர்ந்த இவர், ஜீவாவின் முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். இந்த படம் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும், பூஜாவை இந்த படத்தில் கவனித்தனர். பின்னர், தெலுங்கில் ஒக்க லைலா கோசம் என்ற படத்தில் நடித்து, அம்மொழி ரசிகர்கள் மனங்களிலும் இடம் பிடித்தார்.
பூஜா ஹெக்டே, திரையுலகில் நுழைவதற்கு முன்பு மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டார். அதன் பின்பு, மிஸ் யுனிவர்ஸில் ரன்னர் அப் பட்டத்தையும் வென்றார்.
தமிழ் திரையுலகில் கம்-பேக்..
பூஜா ஹெக்டேவிற்கு முகமூடி படத்திற்கு பிறகு, தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், அவருக்கு அல வைகுந்தபுரம், ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, தமிழில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்த படம்தான், பீஸ்ட். இந்த படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு, இவர் சமீபத்தில் நடித்து முடித்திருக்கும் தமிழ் படம், ரெட்ரோ.
மேலும் படிக்க | 6 வருடங்களாக நடிக்கவே இல்லை..42 வயது நடிகைக்கு 30 கோடி சம்பளம்! யார் தெரியுமா?
மேலும் படிக்க | சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு வாய்ஸ் கொடுத்த நடிகை! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ