Retro OTT Release : நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
மே ஒன்றாம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்த படத்தை படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம், பிரகாஷ்ராஜ் என பலர் நடித்திருந்தனர். ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் ரெட்ரோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. படத்தின் டிரைலரும் ரசிகர்களுக்கு பிடித்திருந்ததால், படம் எப்படி இருக்கும் என்று பார்க்க அனைவரும் ஆவலுடன் இருந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் கலவையான விமர்சனம் பெற்றதால், அவருக்கும் ரெட்ரோ முக்கியமான ஒரு படமாக இருந்தது.
Thank you Audience for bringing SMILES to team #Retro #TheOneWon #LoveLaughterWar #RetroCult pic.twitter.com/huDo0gRuzD
— karthik subbaraj (@karthiksubbaraj) May 12, 2025
எனவே ரெட்ரோ (Retro) படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் பாதி நன்றாக இருக்கிறது என்றும், இரண்டாம் பாதியில் வேறு ஏதோ ஒரு கதையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இரண்டு படங்களை பார்ப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தது. இதனால் ஒரு தரப்பு ரசிகர்களுக்கு படம் பிடித்தது என்றும், ஒரு தரப்பு ரசிகர்கள் படம் பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே ரெட்ரோ படத்தில் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 17 கோடிகளை கடந்து சாதனை படைத்திருந்தது. சூர்யாவின் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக ரெட்ரோ மாறியது. மேலும் இந்த படம் வசூல் ரீதியாக படம் பெரிய வரவேற்பை பெற்றதாகவும்; உலகம் முழுவதும் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Dear Audience and #AnbaanaFans, we're humbled by your immense love and support for #TheOne
Grateful for the glory, it's all because of you #RETRO@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian… pic.twitter.com/wScjYwaqu4
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 18, 2025
இந்நிலையில் தற்போது ரெட்ரோ படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பிரபல நடிகருடன் உறவில் ஆர்த்தி ரவி? உண்மை வெளிவருவது எப்போது? பிரபலம் சொன்ன தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ