May Month Releasing Tamil Movies: மே மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான மாதமாக அமைய உள்ளது. வாரம் வாரம் புதிய படங்கள் திரைக்கு வந்தாலும் முக்கியமான படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த வகையில் காமெடி, ரொமான்ஸ், திரில்லர், ஹாரர் என பல்வேறு விதமான படங்கள் மே மாதம் வெளியாக உள்ளது. முக்கியமாக டாப் ஹீரோக்கள் நடித்த சில படங்களும் இந்த மாதம் வெளியாகியுள்ளது. இதனால் மே மாதம் தமிழ் சினிமாவில் அதிகம் பணம் கொட்டும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மே மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | அஜித் மட்டுமல்ல..தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருது பெறும் 13 பேர்!! முழு லிஸ்ட்..
ரெட்ரோ
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெத்தே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ரெட்ரோ. மேலும் இந்த படத்தில் கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இது ஒரு ஆக்சன் கலந்த காதல் திரைப்படம் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பீரியட் படமாக உருவாகியுள்ள இது சூர்யாவிற்கு முக்கியமான படமாக அமைய உள்ளது. கடைசியாக வெளியான கங்குவா படம் தோல்வி அடைந்ததால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மே 1ம் தேதி திரைக்கு வருகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார் மற்றும் சிம்ரன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அபிஷன் ஜீவிந்த் என்ற இளம் இயக்குனர் இயக்கி இருக்கும் இந்த படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பத்தை பற்றிய கதையை மிகவும் நகைச்சுவையாக சொல்லி உள்ளனர். ட்ரெய்லர் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.
டிடி நெக்ஸ்ட் லெவல்
ஹீரோவாக மாறி உள்ள சந்தானத்திற்கு எப்போதும் கை கொடுப்பது டிடி படம் தான். அந்த வகையில் மீண்டும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் சந்தானம். இந்த படத்தில் சந்தானத்துடன் செல்வராகவன், கௌதம் மேனன், கீர்த்திகா, யாஷிகா ஆனந்த், மாறன், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிடி நெக்ஸ்ட் லெவல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது. மே 16ம் தேதி படம் வெளியாகிறது.
மாமன்
விலங்கு வெப் சீரிஸ் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மாமன். குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரன், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், பால சரவணன், நிகிலா சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மே 16ம் தேதி படம் வெளியாகிறது.
ACE
மகாராஜா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படம் ACE. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் மே 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருந்த நிலையில் சில பிரச்சனைகளால் படம் வெளியாகவில்லை. தற்போது மே மாதம் படம் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | ச்சீ..அஜித் இப்படிப்பட்ட ஆளா? ஹீரா சொன்ன அதிர்ச்சிகர விஷயங்கள்..உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









