)
Kantara Chapter 1: கன்னட திரைப்படமான காந்தாரா கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கேஜிஎஃப் படத்திற்கு பிறகு ஒரு கன்னட படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம்தான் என தெரிகிறது. இயக்குநர் ரிஷப் ஷெட்டியே இப்படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார். நல்ல வசூலை ஈட்டி மகத்தான வெற்றியை பெற்ற இப்படத்தை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை எடுக்க திட்டமிட்டு இயக்கினர். இப்படம் காந்தாராவின் முன்கதையாக அமைந்துள்ளது.
இந்த சூழலில், இப்படம் கடந்த 2ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. காந்தாரா வெற்றி பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றவாறு நல்ல வரவேற்பும் அமைந்தது. அர்வமிகுதியின் காரணமாக சில ரசிகர்கள் இப்படத்தின் இடம் பெற்ற தெய்வ கதாப்பாத்திரங்கள் போல் வேடமிட்டு திரையரங்குகளுக்கு வருகை தெருகின்றனர்.
படத்தின் வசூல்
காந்தாரா சாப்டர் 1 படத்தை Hombale films தயாரிக்க கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். மேலும், ஜெயராம், ராகேஷ் பூஜாரி உள்ளிட்ட பலர் நடைத்திருக்கின்றனர். இந்த நிலையில், இதுவரை காந்தாரா சாப்டர் 1 ரூ. 427 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகளவில் வசூல் சாதனை செய்துள்ள இப்படம் கேரளாவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் வசூலை மிஞ்சியதாக கூறப்படுகிறது.
கூலியை மிஞ்சிய காந்தாரா
அதன்படி கேரளாவில் மட்டும் காந்தாரா சாப்டர் 1 படம் இதுவரை ரூ. 26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கூலி திரைப்படத்தின் கேரள வசூலை விட அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கேரளாவில் கூலி படம் ரூ. 25 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது அதனை மிஞ்சி உள்ளது காந்தாரா சாப்டர் 1 படம். இதேபோல் தொடர்ந்து வசூல் வேட்டையில் இப்படம் இருந்தால், தீபாவளியை நெருங்கும்போது சுமார் 800 கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிடும் என கணிக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ