)
Kantara Chapter 1 Box Office Collection : ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்து, ரிஷப் ஷெட்டி இயக்கிய "காந்தாரா சேப்டர் 1" படம், வெறும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ₹68.5 கோடியைத் தாண்டி, மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
காந்தாரா சாப்டர் 1:
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்த படம், காந்தாரா. 2022ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தையும் ரிஷப் ஷெட்டியே நடித்து இயக்கி இருந்தார். இந்த படம் பெருவெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் முன் கதையும் படமாக எடுக்கப்பட்டது. அதற்கு, காந்தாரா சாப்டர் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டியுடன் சேர்ந்து, ஜெயராம், ராகேஷ் பூஜாரி கிட்ட பலர் நடித்துள்ளனர். ருக்மிணி வசந்த், இதில் வில்லியாக நடித்திருந்தார்.2022ல் வெளியான காந்தாரா படத்தில் காண்பிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட கிராம மக்கள் தெய்வத்தின் கதையாக இந்த படம் இருந்தது.
காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை:
தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன. மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள், நிரம்பிய திரையரங்குகள் என காந்தாரா சேப்டர் 1, தமிழ்நாட்டில் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக மாறியுள்ளது.
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த மனதை கவரும் பாடல்கள், அரவிந்த் S. காஷ்யப் ஒளிப்பதிவில் ஆச்சரியபட வைக்கும் காட்சிகள் , மற்றும் ரிஷப் ஷெட்டியின் ஆற்றல் மிகு நடிப்பு — இவை அனைத்தும் சேர்ந்து திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியுள்ளது.
ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இது ஒரு பெருமையான மைல்கல் — கன்னடத்திலிருந்து உலகத் திரை வரை உயர்ந்த தரத்தில் படங்களை வழங்கும் தங்கள் முயற்சியை இந்நிறுவனம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
அடுத்தடுத்த பாகங்கள் வருமா?
எந்த வெற்றிகரமான படம் வெளியானாலும், அதன் அடுத்தடுத்த பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பர். அப்படி, காந்தாரா படத்தின் பிற கிளை கதைகளின் படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் தானும் தொடர்ந்து எடுத்து வருவதாக ரிஷப் ஷெட்டியும் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ